headlines

img

நெகிழி பேரழிவு

தெருவோரங்கள், கழிவுநீர் சாக்கடைகள், நீர்நிலைகள், கடல்கள் என எங்கும் வியாபித்தி ருக்கும் பொருளாக நெகிழி மாறியிருக்கிறது.  மறுபுறம்  கடல் வாழ் உயிரினங்கள், பறவைகள், தாவரங்கள்  சுற்றுச் சூழலின் பாதிப்பால் மூச்சு  விடத் திணறுகின்றன.

நாம் பயன்படுத்தும் பெரும்பகுதி நெகிழி பொ ருட்களில் மிகக்குறைந்த அளவே மறுசுழற்சி க்குச் செல்கிறது. ஆனால் பெரும் பகுதி நிலத்தை யும், கடலையும் ஆக்கிரமித்து இருக்கின்றன.  2018இல் நாம் பயன்படுத்தும் உப்பிலும் நெகிழி துகள்கள் இருப்பது ஆய்வில் உறுதியானது. தற்போது நம் ரத்தத்திலும் நெகிழித் துகள்கள் இருப்பது  உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு தீங்குகளை விளைவிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின் றனர்.

2020இல் உலகிலேயே அதிக நெகிழி கழிவு களை உற்பத்தி செய்யும் நாடுகளில் 5 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2022இல் மூன்றாவது இடத்திற்குச் சென்றிருக்கிறது. ஆனால் நமது பிரதமர் நரேந்திர மோடி 2019 சுதந்திர தின உரை யில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி ஒழிக்கப் படும் என்று கூறினார். ஆனால் இப்போது வரை  அதை முழுமையாக நடைமுறைப்படுத்த வில்லை என்பதையே  ஆய்வு முடிவுகள் தெரி விக்கின்றன.

2022 ஜூலை 1 முதல் 100 மைக்ரானுக்கு குறை வான நெகிழி தடை விதிக்கப்படுவதாக அறி விக்கப்பட்டது. அறிவிப்பு வெளியாகி 3 மாதங் கள் ஆன நிலையிலும் அது முழுமையாக அம லுக்கு வரவில்லை. நாளுக்கு நாள் நெகிழி கழிவு களின் அளவுதான் அதிகரித்து வருகிறது. இந்தி யாவில் ஆண்டிற்கு 3.5 மில்லியன் டன் நெகிழி உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 1.56 மில்லியன் டன் மட்டுமே மறுசுழற்சிக்கு உகந்தவை. அதுவும் முறையாக மறுசுழற்சிக்கு உட்படுவதைக் கண்காணிக்க எந்த ஏற்பாடும் இல்லை. ஆனால் தற்போது வரை தடை செய்யப்பட்டி ருக்கும் நெகிழியின் அளவு மொத்த உற்பத்தி யில் 2 முதல் 3 விழுக்காடு மட்டுமே.

இதுவரை தடை செய்யப்பட்டிருக்கும் நெகிழி கள் அனைத்தும் சிறு, குறு உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் நெகிழி பொருட்கள்தான். ஆனால் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் நெகிழிக்குத் தடை இல்லை. அதா வது உற்பத்தியாகும் நெகிழிக் கழிவுகளில் 60  சதவிகிதம் 35 பிராண்டுகள் தயாரிக்கக் கூடிய வையே. இவற்றிற்கு இன்று வரை தடையில்லை. நெகிழி ஒழிப்பு என்பது சிறு குறு உற்பத்தியாளர் களை ஒழிக்கும் திட்டமாக மாறிவிடக்கூடாது.

அரசுகள்  நினைத்தால் மட்டும் நெகிழியை ஒழிக்க முடியாது. அதன் ஆபத்துகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைத்து மக்களும் பங்கேற்கும் இயக்கமாக மாற்றப்பட வேண்டும். தமிழக அரசு முன்மாதி ரியாக மஞ்சள் பை திட்டத்தைக் கடந்த வருடம் அறிமுகப்படுத்தியது வரவேற்கத்தக்கது. அதே வேகத்தில்  நெகிழி ஒழிப்பு நடவடிக்கையையும் துரிதமாக முன்னெடுக்க வேண்டும்.

;