headlines

img

மெக்சிகோ : ஒரே கல்லில் பல மாங்காய்கள்

மெக்சிகோவின் அடுத்த ஜனாதிபதியாக கிளாடியா ஷீன்பாம் தேர்வு செய்யப்பட்டிருக்கி றார். மெக்சிகோவின் முதல் பெண் ஜனாதிபதி என்பதோடு, அந்நாட்டில் முதன்முறையாக ஒரு விஞ்ஞானி ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறார். எல்லாவற்றிற்கு மேலாக, இடதுசாரிப் பாரம்பரி யத்தோடும் அவர் ஜனாதிபதிப் பொறுப்பில் அமர விருக்கிறார்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் அரசியல் அமைப்புச் சட்டம் கொண்டு வருவதற்கு நீண்ட நெடிய போராட்டம் நடத்தப்பட்டது. மக்களின் விடாத போராட்டத் தால் 1917ல் அரசியல் அமைப்புச் சட்டம் நடை முறைக்கு வந்தது. அப்போதிருந்து கூட்டாட்சிக் குடியரசாக இயங்கி வருகிறது. 31 மாநிலங்கள் மற்றும் ஒரு கூட்டாட்சி மாவட்டம்(தலைநகர் மெக்சிகோ சிட்டி) என்றுள்ள நாட்டில் இடதுசாரி கள் அரசியல் செல்வாக்கு பெற்றவர்களாகவே இருக்கிறார்கள்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொரேனா கட்சி சார்பில் போட்டியிட்ட ஆண்ட் ரெஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார்(சுருக்கமாக அம்லோ) ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப் பட்டார். மக்கள் நலக் கொள்கைகளை நடை முறைப்படுத்துவதில் பெரும் அக்கறை செலுத்தி னார். பல்வேறு பிரச்சனைகளில் தீர்வுகளை நோக்கி நகர்ந்த அவரது இடதுசாரிக் கொள்கை களைத் தொடர்வேன் என்ற உறுதிமொழியு டன்தான் கிளாடியா தேர்தலில் நின்று, வெற்றியும் பெற்றுள்ளார்.

மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மாணவர் உதவித்தொகை அதிகரிப்பு ஆகிய இரண்டும் தற்போதைய ஜனாதிபதி அம்லோவால் நடப்பாண்டில் கொண்டு வரப்பட்டது. சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்தத் திட்டங்கள், எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் ரத்து செய்யப்படும் என்ற நிலைமை இருந்தது. இந்தத் திட்டங்களை தொடர்ந்து எடுத்துச் செல்வதாக கிளாடியா உறுதி அளித்துள்ளார்.

மெக்சிகோவில் பெண்களுக்கு வாக்குரிமை கோரி நடந்த போராட்டங்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவையாகும். 1953ல்தான் பெண்களுக்கு வாக்கு ரிமை வழங்கப்பட்டது. ஆனால், பெண்கள் இரண்டாந் தரக் குடிமக்களாக நடத்தப்படுவது தொடர்ந்தது.பெண் உரிமைக்கான போராட்டத்தின் ஒரு வடிவ மாகவே கிளாடியா ஜனாதிபதியாகத் தேர்வாகியி ருக்கிறார் என்று மாதர் சங்கங்கள் தெரி வித்துள்ளன.

மக்கள் நலன்காக்கும் இடதுசாரி சிந்தனை கொண்டவர், விஞ்ஞானி, முதல் பெண் ஜனாதி பதி, வன்முறைக்கு எதிரான போராளி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடைய ஒருவரை மெக்சிகோ மக்கள் தேர்வு செய்துள்ளனர். லத்தீன் அமெரிக்கா வில் இடதுசாரி சிந்தனையின் கொடி தொடர்ந்து உயரப் பறந்து கொண்டிருக்கிறது. அதை மெக்சி கோ மக்கள் மேலும் உறுதி செய்திருக்கிறார்கள்.

;