ஒவ்வொரு மதத்திற்கும் தன் விலாசங்களை மாற்றிக்கொண்டிருக்கும் கடவுள் ஒரு நாள் தொலைந்து போகிறார் இடிக்கப்பட்ட கோவில்களிலும் மசூதிகளிலும் தேவாலயங்களிலும் தேடியபிறகும் அவரின் இல்லாமை குருதியாய் பெருக்கெடுத்து ஓடுகிறது குற்ற உணர்ச்சி கொண்ட மனங்கள் ஆற்றாமையில் அரற்ற சுயம்பு ஆண்பாலாக தோன்றுகிறார் தவளையுடையணிந்த கடவுள் இனி தன்னை நிருபிக்க அற்புதங்கள் புரிந்தாக வேண்டும் இரவெல்லாம் நிலத்திலும் நீரிலும் ஆகாயத்திலும் நீந்திச்செல்லும் மனிதர்கள் மேல் மோதிவிடாமல் தன் சக்திக்கும் மீறிய எத்தனை அபாயகரமானது கடவுள் தன்மை பெரும்பாறையாய் தோளில் அழுத்த விற்பன்னர்களின் நீதியை சுமந்து செல்லும் இதயத்தில் நெருஞ்சி முட்கள் முளைக்க இதயத்தை கழற்றி வைக்கிறார் மீதியிருக்கும் மனதின் குற்ற உணர்ச்சிகளின் வழி சாத்தான் நுழைகிறான்