headlines

img

எலூரு சம்பவம்  உணர்த்தும் பாடம்...

ஆந்திர மாநிலம் எலூரு கிராமத்தில் திடீரெனஉடல்நலக் குறைவு ஏற்பட்டு 100க்கும் மேற்பட்டோர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல்  என்ன என்பது இன்னும் கண்டறியப்படாததால் மர்மக் காய்ச்சல் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி 4பேர் உயிரிழந்துவிட்டனர். பாதிக்கப்பட்ட நபர்களின்  ரத்தத்தைப் பரிசோதனைசெய்தபோது அதில் ஈயம், நிக்கல் அதிகளவில்இருப்பது தெரிய வந்துள்ளது.இது ஒருபக்கம் இருந்தாலும் நாட்டில் தாராளமய, தனியார்மய பொருளாதார கொள்கைகள் அமலுக்கு வந்த பின்னர் ஏராளமான தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டன. அவற்றில் சில நிறுவனங்கள் சுற்றுச்சூழல் விதிகளைப் பின்பற்றுவதில் போதிய கவனம்செலுத்தவில்லை. இதனால் விபத்துக்கள் சர்வசாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. சில நேரங்களில் ஆலைகளிலிருந்து ரசாயனம் கசிந்துகாற்றும் தண்ணீரும் மாசுபடுவது தொடர்கதையாகி வருகிறது.

 மேட்டூரில்  கெம்ப்ளாஸ்ட் சன்மார்  என்ற தனியார் நிறுவனம் பாலிவினைல் குளோரைடு எனும் ரசாயனத்தை உற்பத்தி செய்தபோது அந்தஆலையிலிருந்து மழைக்காலங்களில் வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள ஓடையில் கலந்ததால் விவசாய கிணற்றுத் தண்ணீரில் குளோரைடுஅளவு அதிகரித்து அந்த தண்ணீர் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறியது.நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை நடந்தபோது அந்த ஆலையிலிருந்து உற்பத்தியாகும் நச்சு ஏற்படுத்தக் கூடிய கழிவுகளைச் சேமித்து வைக்கக்கூடிய இடங்களில் கசிவுகளைத் தடுக்கஎந்த ஏற்பாடும் இல்லை என்பது தெரியவந்தது. இதே ஆலையில் ஒருமுறை ஹைட்ரஜன் பெராக்ஸைடு தயாரிக்கும் யூனிட்டில் இருந்து வெளியேறிய நச்சுத்தன்மை வாய்ந்த புகையால் 10 பேர்
பாதிக்கப்பட்டனர்.

இதேபோல் தூத்துக்குடியில் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கந்தக- டை-ஆக்சைடு வெளியேறியதால் அந்நகர மக்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர்.  பீகாரைச் சேர்ந்ததொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.  மேலும், நச்சுக் காற்றால், மரங்களின் இலைகளும் பூக்களும் கருகிய நிலையில்தான் ஆட்சியாளர்கள் தலையிட்டனர். உயர்நீதிமன்றம் அந்த ஆலைக்குத் தடைவிதித்தது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவேண்டிய தேசிய பசுமைத் தீர்ப்பாயமோ  ஆலைமீதான உயர்நீதிமன்ற தடையை நீக்கியது. இந்த உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதி மன்றம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு ரூ. 100 கோடி அபராதம் விதித்தும் ஆலையைத் தொடர்ந்து இயக்கவும் தடைவிதித்து உத்தரவிட்டது.விரிவாக்கம் என்ற பெயரில் உற்பத்தியைஅதிகரிக்கும்போது பல ஆலைகள் சுற்றுச்சுழல்விதிகளை முறையாக கடைபிடிப்பதில்லை. இதைகண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு மத்திய மாநில அரசுகளின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு உள்ளன.  இந்தவாரியங்களின் செயல்பாடுகளை ஆய்வுக்கு உட்படுத்தவேண்டியது அவசியம். சுற்றுச்சூழல் மாசுவுக்கு இவர்களையும் பொறுப்பாக்கவேண்டும்,

;