வானளாவிய அதிகாரம் தங்களுக்கு இருப்ப தாக கருதிக் கொண்டு வானத்துக்கும், பூமிக்கும் தாவிக்குதிக்கும் ஆணவ ஆளுநர்களின் தலை யில் உச்சநீதிமன்றம் ஓங்கிக் குட்டு வைத்துள் ளது. மாநில சட்டப் பேரவைகளில் நிறைவேற்றப் பட்ட சட்டமுன்வரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் சண்டித்தனம் செய்யும் ஆளுநர்க ளை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது
பஞ்சாப் மாநில அரசு அந்த மாநிலத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. பண மசோதா உட்பட மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்பதை சுட்டிக்காட்டி குறிப்பிட்ட கால வரையறைக்குள் ஆளுநர் கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என பஞ்சாப் அரசு கோரியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலை மையிலான அமர்வு, ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்றும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டியி ருப்பது பொருத்தமானதல்ல; ஆளுநர்கள் தங்க ளது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் மிகச் சரியாக சுட்டிக் காட்டியுள்ளது.
ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பது குறித்து தமிழ்நாடு அரசும், கேரள அரசும், உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்குக ளையும் சேர்த்து விசாரிப்பதாக தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறியுள்ளது.
ஆன்லைன் லாட்டரி மோசடிக்கு தடை விதிக்கும் மசோதா தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநர் ரவி அதற்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்தார். உச்சநீதிமன்றம் தலையிட்டு கேள்வி எழுப்பிய பிறகே அந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அதேபோல தெலுங்கானா மாநில அரசும் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அந்த மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராசன் சில மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார்.
ஒன்றிய பாஜக அரசு ஆர்எஸ்எஸ் கருத்தி யல் கொண்டவர்களையே ஆளுநர்களாக நிய மிக்கிறது. அவர்கள் அரசியல் சட்டக் கடமை களை மறந்துவிட்டு ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்க ளாக மாறி குறுக்குச்சால் ஓட்டி குழப்பம் விளை விக்கின்றனர்.
பஞ்சாப் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கூறி யுள்ள அறிவுரை தமிழகம், கேரளம், தெலுங்கா னா, மேற்குவங்கம், புதுதில்லி ஆளுநர்களுக்கும் பொருந்தும். இனிமேலாவது அவர்கள் தங்க ளுக்குரிய பணியை மட்டும் செய்ய முன் வர வேண்டும்.