headlines

img

குற்றவாளிக்கு அடைக்கலம் தருகிறாரா ஆளுநர்?

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் முறைகேடு மற்றும்  வன்கொடுமை வழக்கில் காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்.  தனியார் நிறுவன மான பூட்டர் பவுண்டேஷன் மற்றும் பூட்டர் பார்க் நிறுவனங்கள் வாயிலாக பயிற்சிக் கல்வி, பாடத்திட்டம் வழங்குவது தொடர்பாகப் பல தனி யார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அதன் மூலம் முறைகேட்டில் ஈடுபடு வதாக அவர் மீது புகார்கள் நிலுவையில் உள்ளன.

 இது மட்டுமல்ல, பாஜக ஆதரவு தனக்கு இருப்பதால் பேராசிரியர்களை ஒருமையில் திட்டுவது, பட்டியலின பேராசிரியர்களை சாதி ரீதியாக அவமானப்படுத்துவது என  அராஜக மாக நடந்துகொள்வது அவரது வழக்கம். பொதுவாக  பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனங்களைப் பொறுத்தவரை   மாநில அரசு ஒருவரைத் தேர்வுசெய்து அவரது பெயரை ஆளுநருக்கு பரிந்துரைக்கும். அந்த பெயருக்கு ஒப்புதல் வழங்குவதுதான் ஆளுநரின் வேலை. ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்க ளில் கூட்டாட்சித் தத்துவத்தை  சற்றும் மதிக்கா மல், மாநில அரசு  பரிந்துரைக்கும் நபரது நியம னத்திற்கு ஒப்புதல் வழங்க மறுப்பது  அல்லது தனக்கு வேண்டியவர்களை துணைவேந்தராக நியமித்து மாநில அரசுக்கு குடைச்சல் கொடுப் பது ஆளுநர்களின் வேலையாக மாற்றப் பட்டுள்ளது.  

தந்தை பெரியார் பெயரில் அமைந்துள்ள பல் கலைக் கழகத்தின் முக்கியமான பதவிகளில் ஜனநாயக விரோதிகளையும் பிற்போக்காளர்க ளையும் ஆளுநர் ரவி அமர்த்தியுள்ளார். அப்படிப் பட்ட ஒருவர்தான் ஜெகநாதன். அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளபோதி லும் அவரை ரிமாண்ட் செய்ய மறுத்து அவ ருக்கு சேலம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் இடைக் கால ஜாமீன் அளித்தது சட்டப்படி தவறு என்று மாநில அரசின் சார்பில் வாதிடப்பட்டு வருகிறது. வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின்கீழ் துணை வேந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் சிறப்பு நீதிமன்றத்துக்கான அதிகாரத்தை குற்ற வியல் நடுவர் எப்படி எடுத்துக்கொண்டார் என்ற விவகாரம் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில்  கடுமை யான குற்றச் சாட்டுக்கு உள்ளான நபரை ஆளுநர் சந்திப்பதும்,  அவருடன் பல்கலைக் கழக செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்துவதும் தமிழகம் இதுவரை கண்டி ராத விசித்திரமாக உள்ளது. ஆளுநர் ரவியின் இத்தகைய செயல், குற்றம் செய்வோருக்கு அடைக்கலம் தருவதே ஆகும். பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தருக்கு ‘எதையும் செய்யலாம் என்ற சமிக்ஞையை ஆளுநர் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார். ஆளுநர் போன்ற உயர்பதவியில் இருப்ப வர்களின் இத்தகைய மோசமான செயல்பாடு இதோடு நிற்கப்போவதில்லை.  நீதிமன்றத் திற்கும் தவறான வழிகாட்டுதல்களை தந்து விடும். இது அரசியல் சட்ட விரோதம்.