headlines

img

எதைக் கொண்டு எழுதுவது?

சந்திரயான் -3 விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வில் புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க் கப்படுகிறது. இது இந்தியாவிற்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கே இதன் ஆய்வு வழிகாட்டுவ தாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இதற்காக உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக் கும் நமது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்! 

குறிப்பாக சந்திரயான்- 3 ஐ ஏவுவதற்கான ஏவு தளத்தை அமைத்த ராஞ்சியில் உள்ள கனரக பொறியியல் நிறுவனத்தின்  பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களைப் பாராட்டுவதோடு நன்றி யையும் தெரிவிக்க வேண்டும். கடந்த 17 மாதங்க ளாக ஒன்றிய மோடி அரசு இவர்களுக்கு சம்பளம் கூட வழங்காமல் இருந்த போதிலும்  தேசத்தின் நலனுக்காக ஒருங்கிணைந்து வெற்றிகரமாக அந்த ஏவுதளத்தை நிறுவியிருக்கின்றனர்.இதுதான் தேசத் தின் மீதான உண்மையான அக்கறையாகும்.

நிலவின் மற்ற பகுதிகளை ஆய்வு செய்வதை விட தென்துருவத்தில் ஆய்வு செய்வது மிகவும் கடினமான ஒன்று. தென்துருவத்தின் பெரும்பான் மையான பகுதிகளில் சூரிய ஒளி விழுவதில்லை. அப்பகுதி  கடும் குளிர் மற்றும் உறைநிலையில் இருக்கலாம். ஹைட்ரஜன், ஹீலியம்-3 உள்ளிட்ட வாயுக் கனிமங்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது. இந்த ஆய்வு வெற்றிபெறும் நிலையில் விண் வெளித்துறையில் இந்தியா தனக்கிருக்கும் ஆற்றலை உலக அரங்கில் பறைசாட்டுவதாக அமையும். 

நமது பிரதமரோ, சந்திரயான் -3 ஏவப்பட்ட தினத்தைப் பொன் எழுத்துக்களால் பொறிக் கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால் மறுபுறம் அதே சந்திரயான் 3 விண்கல தயாரிப்பில் முக்கியப் பங்கு வகித்த ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் (எச்இசி)- நிறுவனத்தில் பணியாற் றும் 3150 பேருக்குக் கடந்த 17 மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை. ஒன்றிய கனரக தொழில் அமைச்சகத்தின் கீழ்  இயங்கும் இந்நிறு வனம், செயல்பாட்டு மூலதனமாக ஒன்றிய அரசிடம் ரூ. 1000 கோடி கேட்டு மன்றாடியது. ஆனால் வழங்கவில்லை. அதே நேரம்  தனது கூட்டாளி  தனியார் கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடிகளை வாரி வழங்குகிறது. இந்த நய வஞ்சகத்தை எதைக்கொண்டு எழுதுவது? 

2020- இல்  வேற்றுக் கிரக ஆய்வு, விண்வெளி பயணம் மற்றும் இஸ்ரோவின் பிற தொழில்நுட்ப செயல்பாடுகளிலும் தனியாரை  அனுமதித்தது.  ராக்கெட் ஏவுதல், ஏவுதளங்கள் அமைப்பதிலும் கூட தனியாருக்கு அனுமதி வழங்கியது. இத் துறைகளிலும், அதானி  மற்றும் அம்பானி குழு மங்களை களம் இறக்க திட்டமிட்டு வருகிறது. அரசு பணத்தில் உருவாக்கப்பட்ட விண்வெளி கட்ட மைப்பை தனியாருக்கு தரைவார்ப்பதுதான், அறி வியல் வளர்ச்சிக்கான  மோடியின் கொள்கை. 

அரசு  நிதி ஒதுக்காததால், விஞ்ஞானிகள் தங்கள் சேமிப்பிலிருந்து  ஆராய்ச்சிக்குச் செலவ ழிக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தாண்டு பட்ஜெட்டில் அறிவியல் ஆராய்ச்சிக் கான நிதியில் 6.87 சதவிகிதம் வெட்டிச் சுருக்கி யது. இது விஞ்ஞான வளர்ச்சிக்கும், தேசநல னுக்கும் விரோதமானது!