நீதிபதி அப்துல் நசீரை ஆந்திரப் பிரதேச ஆளுநராக நியமித்தது, நீதித்துறையின் சுதந்தி ரத்தை உள்ளேயும் வெளியேயும் அரசாங்கம் மீறு வதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு ஆகும்.
இது நீரோடையில் அசுத்தத்தையும், விஷத்தையும் கலக்கும் செயல் என்றும், நீதித் துறைக்கு அவமானம் என்றும் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை கடுமையாகப் பாதிக்கும் என்றும் வழக்கறிஞர்கள் உட்பட பல தரப்பினரும் கொந்தளிப்பை வெளிப்படுத்தி யுள்ளனர்.
நீதிபதி அப்துல் நசீர் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற ஆறு வாரங்க ளுக்குள், பாஜக அரசின் பரிசாக ஆளுநர் பதவி யைப் பெற்றுள்ளார். இந்த பதவி ராமர் கோவில் கட்ட உத்தரவிட்ட நீதிபதிகளுக்கு மோடி அரசு அளித்த பம்பர் பரிசுகளில் ஒன்றுதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பாபர் மசூதி வழக்கு, பணமதிப்பு நீக்க வழக்கு ஆகியவற்றில் மோடி அரசுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கிய அமர்வுகளில் நீதிபதி அப்துல் நசீர் இடம் பெற்றிருந்தார். பாபர் மசூதி வழக்கில் சர்ச்சைக்குரியதாக ஆக்கப்பட்ட நிலத்தை ராமர் கோவிலை கட்டுவதற்காக இந்து அமைப்பிடம் வழங்க இவரும் சேர்ந்தே உத்தர விட்டார். பணமதிப்பு நீக்கம் தொடர்பாக ஒன்றிய அரசின் நடவடிக்கை செல்லும் எனவும் தீர்ப்ப ளித்தவர் இவர். அயோத்தி வழக்கில் இந்துத்துவா சக்திகளுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த ஐந்து நீதிபதிகளில் இதுவரை மூன்று நீதிபதிகளுக்கு மோடி அரசு பதவி வழங்கி, அவர்களது சேவ கத்திற்கு விலை கொடுத்துள்ளது. அவர்களில் ஆளுநர் பதவி என்ற விலையை பெற்றிருப்பவர் அப்துல் நசீர்.
இந்த அரசியலமைப்பு நியமனத்திற்கு அவர் சம்மதம் தெரிவித்திருப்பது, அரசியல மைப்பு வலியுறுத்தும் சுதந்திரமான மற்றும் பொறுப்பு வாய்ந்த நீதித்துறை என்ற கருத்தை கேலிக்கூத்தாக்குவதாக உள்ளது.
இந்த நியமனம் மற்றும் பணிக்கு சம்மதம் தெரிவித்ததன் மூலம், நீதிபதி நசீர், கொள்கை கள் மற்றும் சித்தாந்த அடிப்படையில் தற்போதைய ஒன்றிய ஆட்சியாளர்களுடன் இணைந்தே இருந் ததை அவரே நிரூபித்து விட்டார். அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு கொலீஜியத்தின் ஒரு பகுதி யாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில், அரசு நிர்வாகமானது, நீதிபதி களைத் தேர்ந்தெடுக்கும் மற்றும் நியமிக்கும் அதிகாரத்தை அபகரிப்பதற்கு எதிராக நீதித்துறை சார்ந்த அனைவரும் குரல் எழுப்ப வேண்டும். அண்மையில் சர்ச்சைக்குரிய விக்டோரியா கௌரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி யாக நியமிக்கப்பட்டது, சுதந்திரமான நீதித்துறை யின் தேர்வு முறையிலும் அரசாங்கம் மேலாதிக் கம் செலுத்துவதை காட்டியது. எனவே, அரசியல மைப்பால் உருவாக்கப்பட்ட தன்னாட்சி அமைப் பான நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்க அனைவரும் முன்வரவேண்டும்.