19-ஆவது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ஆம் தேதி நடைபெறும் நிலையில் இந்திய ஹாக்கி அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய ஹாக்கி விளையாட்டில், 18 பேர் கொண்ட ஆண்கள் அணியில் கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங்கும், துணை கேப்டனாக ஹர்திக் சிங்கும், பெண்கள் அணியில் அணியின் கேப்டனாக கோல்கீப்பர் சவிதா, துணை கேப்டனாக தீப் கிரேஸ் எக்கா களமிறங்குகிறார்கள்.
ஆண்கள் பிரிவில் பங்கேற்கும் 12 அணிகளும், பெண்கள் பிரிவில் 10 அணிகளும், ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது.
செப்டம்பர் 23-ஆம் தேதி ஸ்ரீஜேஷ், கிரிஷன் பதாக், வருண் குமார், அமித் ரோஹிதாஸ், ஜர்மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), சஞ்சய், சுமித், நீலகண்ட ஷர்மா, ஹர்திக் சிங் (துணை கேப்டன்), மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத், ஷாம்ஷெர் சிங், அபிஷேக், குர்ஜந்த் சிங், மன்தீப் சிங், சுக்ஜீத் சிங், லலித்குமார் உபாத்யாய் என 18 பேர் கொண்ட இந்திய ஆண்கள் அணி தனது முதல் ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானை எதிர்கொள்கிறது.
செப்டம்பர் 27-ஆம் தேதி சவிதா (கேப்டன்), பிச்சுதேவி கரிபாம், தீபிகா, லாம்ரெம்சியாமி, மோனிகா, நவ்னீத் கவுர், நேஹா, நிஷா, சோனிகா, உதிதா, இஷிகா சவுத்ரி, தீப் கிரேஸ் எக்கா (துணை கேப்டன்), வந்தனா கட்டாரியா, சங்கீதா குமாரி, வைஷாலி விட்டல் பால்கி, நிக்கி பிரதான், சுஷிலா சானு, சலிமா டெடி என 18 பேர் கொண்ட இந்திய பெண்கள் அணி தனது முதல் ஆட்டத்தில் சிங்கப்பூரை எதிர்கொள்கிறது.