games

img

உலக பேட்மிண்டன் தரவரிசை டாப் 20-இல் 3 இந்திய வீரர்கள்

பிரிட்டனின் பிர்மிங்காம் நகரில் நடைபெற்ற ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் நிறைவு பெற்ற பின்பு பேட்மிண்டனுக்கான சர்வதேச சம்மேளனம் தரவரிசையை வெளியிட்டது.  ஆடவர் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீரரும் சமீபத்தில் நிறைவு பெற்ற ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஆக்ஸல்சென் முதலிடத்தை பிடித்தார். அதே இங்கிலாந்து தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிவரை முன்னேறி கோப்பையை நழுவவிட்ட இந்தியாவின் லக்‌ஷயா சென் 2 இடங்கள் முன்னேறி 9-வது இடத்திற்கு முன்னேறி யுள்ளார். டாப் 10-இல் உள்ள ஒரே  இந்திய வீரரும் இவர் தான். மற்ற இந்திய  நட்சத்திரங்களான ஸ்ரீகாந்த் 12-ம் இடத்திலும், சாய் பிரணீத் 19-ம் இடத்திலும் உள்ளார்கள். மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சிந்து 7-வது இடத்திலும், ஆடவர் இரட்டை யர் பிரிவில் இந்தியாவின் ராங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி 7-வது இடத்திலும் உள்ளது.