games

img

ஹாக்கி உலகக்கோப்பை யாருக்கு?

விளையாட்டு உலகின் முக்கிய  போட்டிகளில் ஒன்றான ஹாக்கி விளையாட்டின் 15-வது சீசன் (ஆடவர்) உலகக்கோப்பை ஹாக்கி இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தின் 2 நகரங்களில் (புவனேஸ்வர், ரூர்கேலா) நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விடுமுறை நாளான ஞாயிறன்று ஜெர்மனி - பெல்ஜியம் அணிகள் மோதும் கோப்பைக்கான இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. இறுதிப்போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகள் மோதும் 3-வது இடத்திற்கான ஆட்டமும்  நடைபெறுகிறது.

பரிசுத்தொகை எவ்வளவு?

சாம்பியன் பட்டம்: 
ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் தங்கப்பதக்கத்துடன் ரூ.25 லட்சமும், உதவிக்குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ.5 லட்சம். 

2-ஆம் இடம்: 

ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் வெள்ளிப்பதக்கத்துடன் ரூ.15 லட்சமும் உதவிக்குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

3-ஆம் இடம்: 

ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் வெண்கலப்பதக்கத்துடன் ரூ.10 லட்சம் மற்றும்  உதவிக்குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
(குறிப்பு : ஒவ்வொரு அணிக்கும் தனியாக கணிசமான அளவில் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.  டாலர் - பரிசுத்தொகை பெறும் நாட்டின் கரன்சி மதிப்புக்கு ஏற்ப பரிசுத்தொகை மாறுபடும். மற்ற விளையாட்டு உலகக்கோப்பை போல ஒரே அடிப்படை பரிசுத்தொகை கிடையாது. புரியும்படி சொன்னால் ஜெர்மனி சாம்பியன் பட்டம் வென்றால் அந்நாட்டின் டாலர் விகிதத்துக்கு ஏற்ப பரிசுத்தொகை மற்றும் வீரர்களின் தனிப்பட்ட பரிசுத்தொகை இருக்கும்)

3-வது இடத்திற்கான ஆட்டம்
ஆஸ்திரேலியா - நெதர்லாந்து
நேரம் : மாலை 4:30 மணி

இறுதி ஆட்டம்
ஜெர்மனி - பெல்ஜியம்
நேரம் : இரவு 7:00 மணி
இரண்டு ஆட்டங்களும் புவனேஸ்வரில் நடைபெறுகிறது.
 

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பர்ஸ்ட் (FIRST), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் (SELECT) 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் (SELECT) 2 எச்டி (HD), ஹாட் ஸ்டார் (ஓடிடி - ஸ்மார்ட்போன்)

 

;