games

img

தமிழக ஒலிம்பிக் வீரர்களுடன் கலைந்துரையாடிய மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்....

மதுரை:
டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்தில் இருந்து தடகளப் போட்டிகளுக்கு தேர்வாகியுள்ள விளையாட்டு வீரர்கள் ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலெட்சுமி சேகர், ஆரோக்ய ராஜீவ், நாகநாதன் பாண்டி, மற்றும் தடகளப்போட்டிக்கான தலைமை பயிற்சியாளர்ராதாகிருஷ்ணன் ஆகியோருடன்இணையவழியில் கலந்துரையாடினார்.

இணைய வழியில் கலந்துரையாடிய மதுரை மக்களவை உறுப்பினர்சு.வெங்கடேசன், “ஒலிம்பிக் தேர்வாளர்கள் அறிவிக்கப்பட்டவுடன் தமிழகத்தில் இருந்து தடகளப் போட்டிகளுக்கு ஐந்து பேர் பங்கேற்கிறார்கள் என்ற செய்திகேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நீங்கள் பயிற்சி பெறும் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா தேசிய தடகள மைதானத்தில் நேரடியாக சந்திப்பதற்கு நேரம்நிச்சயித்திருந்தேன். ஆனால் விளையாட்டுத்துறை அமைச்சகம் ஒலிம்பிக் போட்டிக்கான கொரோனா கால விதிமுறைகளை கூறியதால், அந்த சந்திப்பை உங்கள் நலன் கருதி தவிர்த்தேன் என்றார்.

தொடர்ந்து உரையாடிய சு.வெங்கடேசன், “தமிழகத்தில் இருந்து தடகளப் போட்டிகளுக்கு முதல் முறையாக ஐந்து பேர், அதிலும் மூன்றுபெண்கள் பங்கேற்பது சிறப்புக்குரியது. மதுரையில் இருந்து முதல் வீரராக ரேவதி வீரமணி கலந்து கொள்வதுமிகச் சிறப்பு.  முதல் முறை என்னும் சாதனைகளின் தொடர்ச்சியாக ஒலிம்பிக் தடகளப் போட்டிகளிலும் முதல் இடத்தை உறுதியாக்குவீர்கள் என்று வாழ்த்தினார்”மேலும் “ஒன்றிய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் நிலைக்குழு உறுப்பினர் என்ற முறையில் கூட்டங்களில் ஒலிம்பிக் போட்டிகள் குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறேன். கடந்த ஆண்டு 2020-ஆம்ஆண்டு டோக்கியோவில் நடைபெறவேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவலால் தள்ளிவைக்கப் பட்ட போது, வீரர்களின் தொடர் பயிற்சிக்காக கூடுதலாக எவ்வளவு நிதிஒதுக்கீட்டை அதிகரிப்பது என்பதுகுறித்து பல மணி நேரம் பேசியுள் ளோம்” என்பதை வீரர்களிடம் பகிர்ந்துகொண்டார். 

வெற்றி நிச்சயம்
அப்போதெல்லாம் ஒலிம்பிக்கில் இந்தியாவில் இருந்து மொத்தம் எத்தனை பேர் கலந்து கொள்வார் கள்? அதில் தமிழ்நாட்டில் எத்தனைபேர் இருப்பார்கள்? என பலமுறைஎண்ணியுள்ளேன். ஆனால் மதுரையில் இருந்து ஒரு வீராங்கனை செல்வார் என எதிர்பார்க்கவில்லை. இது மிகுந்த மகிழ்வை உருவாக்கியது. பல்வேறு  தடைகளை மீறி ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ள இவர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வது நிச்சயம் என வாழ்த்தினார்.  தலைமை தடகளப்பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன் சு.வெங்கடேசனிடம் “வீரர்கள் மிகச் சிறப்பான பயிற்சி பெற்று தயாராகி இருக்கிறார்கள். நிச்சயம் வெல்வார்கள்” என நம்பிக்கை தெரிவித்தார்.

;