games

img

குளிர்கால ஒலிம்பிக் அனைத்து பிரிவுகளிலும் அசத்தும் ஆஸ்திரியா

24-வது குளிர்கால ஒலிம்பிக் தொடர் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடை பெற்று வருகிறது. 7-ஆம் நாளான வியாழ னன்று ஆடவர் ஆல்பைன் ஸ்கியிங் பிரிவில் ஆஸ்திரிய வீரர் ஜோஹன்னஸ் தங்கப்பதக்கம் வென்றார். மேலும் ஆடவர் ஸ்னோபோர்ட் பிரிவில் அலெஸன்ட்ரோ தங்கப்பதக்கம் வெல்ல 5-ஆம் இடத்திற்கு கீழ் இருந்த ஆஸ்திரியா திடீரென 3-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

செயல்பாடு பிரமாதம் 

தங்கம், வெள்ளி என எவ்வித தனிப்பட்ட ஆசையுமின்றி ஆஸ்திரிய வீரர் -  வீராங்கனைகள் அனைத்து பிரிவுகளிலும் அசத்தலாக செயல்பட்டு இறுதி வரை போராடி எந்த பதக்கம் கிடைக்கின்றதோ அதனை  புன்னகையுடன் பெற்று செல்கின்றனர். இதற்கு ஆதாரம் என்றால் அனைத்து பிரிவுகளின் இறுதி சுற்றில் ஆஸ்திரிய வீரர் - வீராங்கனைகள் பெயர்கள் வரிசையாக இருக்கும். குறிப்பாக கடந்த காலங்களை விட நடப்பு சீசனில் ஆஸ்திரிய வீரர் - வீராங்கனை களின் செயல்பாடு அசத்தலாக உள்ளது. பதக்கப்பட்டியலில் (தங்கம் - ஆர்டர்) ஆஸ்திரியா (12 பதக்கங்கள்) 3-வது இடத்தில் இருந்தாலும் ஒட்டுமொத்த பதக்கப்பட்டி யலில் ஆஸ்திரியா முதலிடத்தில் (நார்வே (12) உடன் சேர்ந்து) உள்ளது.

பதக்கப்பட்டியல்   (மாலை 4 மணி நிலவரம்)

நாடுகள்                  தங்கம்        வெள்ளி       வெண்கலம்    மொத்தம்
நார்வே                          5                      3                       4                    12
ஜெர்மனி                      5                      3                       0                      8
ஆஸ்திரியா                 4                      4                      4                     12    
ஸ்வீடன்                       4                       1                       2                     7    
அமெரிக்கா                3                      5                       1                      9