17ஆவது சீசன் பாரா ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் தொடரின் பதக்க வேட்டையில் தொடக்கம் முதலே சிறப்பாக்க செயல்பட்டு வரும் சீனா, 4ஆவது நாளி லேயே 50 பதக்கத்தை குவித்து சாதனை படைத்துள்ளது. ஞாயிறன்று மாலை 5 மணி நிலவரப்படி சீனா 24 தங்கம், 18 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 50 பதக்கங்களு டன் முதலிடத்தில் உள்ளது. பிரிட்டன் 14 தங்கம், 9 வெள்ளி, 6 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் 2ஆவது இடத்திலும், பிரேசில் 8 தங்கம், 3 வெள்ளி, 12 வெண்கலம் என 23 பதக்கங்களுடன் 3ஆவது இடத்திலும், ஆஸ்திரேலியா 6 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் 4ஆவது இடத்திலும், நெதர்லாந்து 6 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 10 பதக்கங்களுடன் 5ஆவது இடத்திலும் உள்ளன. 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 5 பதக்கங்களு டன் இந்தியா 23ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.