அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் பள்ளி கிளப் போட்டி (பள்ளி கிளப் அளவிலான) ஓசிஸ் பள்ளியில் நடைபெற்றது. இந்த தொடரில் டெசர்ட் ஓசிஸ் பள்ளியும் - வேலி பள்ளியும் மோதிய ஆட்டத்தில் ஓசிஸ் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆஷரி ஹியூஜஸ் (வயது 16) போட்டியின் போது திடீரென மயங்கி விழுந்தார். மைதானத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பொழுதிலும், ஆஷரி ஹியூஜஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.