games

img

உலக டேபிள் டென்னிஸ் - இந்திய இணை வெற்றி

உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டர் போட்டியில் இந்தியாவின் மணிக்கா பத்ரா, ஜி. சத்தியன் இணை கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது.

உலக டேபிள் டென்னிஸ் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்தது. இதில் நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிபோட்டியில் இந்தியாவின் மணிக்கா பத்ரா-சத்யன் ஜோடி 11-9, 9-11, 12-10, 11-6 என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் டோரா மதராஸ்-நந்துர் எசேகி இணையைத் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

2018 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு முதல்முறையாக இணைந்து ஆடிய மணிக்கா பத்ரா, சத்யன் ஜோடி இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளது. மிகச் சிறிய கால பயிற்சியில் இருவரும் கூட்டாக இந்த பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. 

;