கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் (21 வயது) - அமெரிக்காவின் கவுஃப் (18 வயது) கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றனர். இருவருமே இளம் வீராங்கனைகள் என்பதால் இந்திய நேரப்படி சனியன்று மாலை 6:30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெறும் என் எதிர்பார்க்கப்படுகிறது.