games

img

இந்தியன் வேல்ஸ் டென்னிஸ்

அரையிறுதியில் ஸ்வியாடெக்

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடைபெற்று வரும் இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் முதல்நிலை வீராங்கனையான போலந்தின் ஸ்வியாடெக் 6-2, 6-3 என்ற ருமேனியாவின் கிறிஸ்டியாவை வீழ்த்தி அரை யிறுதிக்கு முன்னேறினார்.

அல்காரஸ் அபாரம்

நீண்ட கால ஓய்வுக்கு பிறகு இந்தியன் வேல்ஸ் தொடரில் புயல் வேகத்தில் விளையாடி வரும் டென்னிஸ் உலகின் முதல் நிலை வீரரும், ஸ்பெயின் இளம் வீரருமான அல்கா ரஸ் (19) தனது காலிறுதி ஆட்டத்தில், முன்னணி வீரரும்,  உலக தரவரிசையில் 8-ஆம் நிலை வீரருமான கனடாவின் பெலிக்ஸை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இத்தாலியின் சின்னர், அமெரிக் காவின் டெய்லரை 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

போபண்ணா ஜோடிக்கு  இன்று அரையிறுதி ஆட்டம்

இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் தொடரில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வரும் இந்தியாவின் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி தனது காலிறுதி ஆட்டத்தில் கனடாவின் பெலிக்ஸ் - சபலாவ் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. சனி யன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்கா வின் இஸ்னர் - ஷாக் ஜோடியை எதிர்கொள்கிறது. இந்த  ஆட்டம் இந்திய நேரப்படி காலை 8:30 மணிக்கு நடை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

;