games

img

கண்ணீருடன் விடைபெற்றார் செரினா வில்லியம்ஸ்

இந்தியா - பாகிஸ்தான் 
இடம்: துபாய்; நேரம்: 7.30 மணி

டென்னிஸ் உலகின் நட்சத்திர வீராங்கனையும், 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான அமெரிக்காவின் செரினா வில்லி யம்ஸ் தனது 27 வருட டென்னிஸ் வாழ்க்கைக்கு நிரந்தரமாக விடை கொடுத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரோடு சர்வதேச டென்னிஸ் தொடரில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார். அதன்படி தனது கடைசி டென்னிஸ் தொடரான 142-வது அமெரிக்க ஓபன் சீசனில் பட்டம் வென்றாவது டென்னிஸ் கள வாழ்க்கையை நிறைவு செய்வோம் என்ற எண்ணத்துடன் தொடக்கம் முதலே அதிரடி  ஆட்டத்தை வெளிப்படுத்தி 3-வது சுற்று வரை முன்னேறி அசத்தினார். சனியன்று நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் அஜிலாவை எதிர்கொண்டார் செரினா. இந்த ஆட்டத்தில் 7-5, 6-7 (4-7), 6-1 என்ற செட் கணக்கில் செரினாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார் அஜிலா. செரினாவின் நிலையை உணர்ந்து சந்தோசம், துள்ளல் எதையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக கைகொடுத்து மைதானத்தை விட்டு நகர்ந்தார் அஜிலா.

செரினா ‘27’

பிறப்பு : 1981-ஆம்
ஆண்டு செப்
டம்பர் 26-ஆம்தேதி
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் 
முதல் சர்வதேச ஆட்டம் : 14 வயதில் - டபிள்யு.டி.ஏ (1995)
முதல் கிராண்ட்ஸ்
லாம் : 1998 (பிரெஞ்சு,
விம்பிள்டன், அமெ
ரிக்கா - கலப்பு இரட்டையர்), ஒற்றை
யர் பிரிவில் 1999-ஆம் ஆண்டு அமெரிக்கா ஓபன் டென்னிஸ் 
பட்டங்கள் : ஒற்றையர் பிரிவில் மொத்தம் - 73 பட்டங்கள், இரட்டையர் பிரிவில் 23 பட்டங்கள், 4 ஒலிம்பிக் பதக்கங்கள் 
கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் மொத்தம் : 39
ஆஸ்திரேலியா - 7 (இரட்டையர் - 4)
பிரெஞ்சு - 3 (இரட்டையர் - 2)
விம்பிள்டன் -7 (இரட்டையர் - 6, கலப்பு இரட்டையர் - 1)
அமெரிக்கா - 6 (இரட்டையர் - 2, கலப்பு இரட்டையர் - 1)
ஒலிம்பிக்கில் - 4 பதக்கம் (4 தங்கம்) : 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் தொடரில் அமெரிக்க அணி ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.
டூர் பைனல்ஸ் - 5 
கிராண்ட்ஸ்லாம் கோப்பை - 1 
பெடரேஷன் கோப்பை - 1 
(வரலாற்றுச்சாதனையுடன் - 1999) 

சாதனை : 319 வாரங்கள் உலக டென்னிஸ் தரவரிசையில் முதலி டத்தில் அமர்ந்து டென்னிஸ் உலகின் உயரிய சாதனை.

கறுப்பின வீராங்கனைகளின்  ரோல் மாடல்

இனப் பாகுபாடு பெரியளவில் இல்லை யென்றாலும் நவீன டென்னிஸ் உல கில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த  வீராங்கனைகள் தான் அதிகம் சாதிப் பார்கள். ஆசியர்கள், ஆஸ்திரேலியர்கள், அமெரிக்கர்கள் கானல் நீரைப்போன்று ஒரு சில பட்டங்களை வெல்வார்கள். ஆப்பிரிக்கர்கள், முக்கியமாக கறுப்பின வீராங்கனைகள் டென்னிஸ் விளை யாட்டில் கலந்து கொண்டு ஒன்றிரண்டு பட்டங்கள் வென்றாலும் மிக குறைந்த அளவிலேயே, பெயரளவில் இருந்தனர். இதுதான் 1990 கால டென்னிஸ் வர லாறு. தற்போதைய நவீன டென்னிஸ்  காலகட்டத்தில் கறுப்பின வீராங்கனைக ளும் சாதிக்கலாம் என்ற புதிய பாதையை அமைத்துக் கொடுத்தவர் செரினா தான். இதற்கு முதன்மையான ஆதாரம் அவரது அதிரடி ஆட்டங்கள் மூலம் கிடைத்த 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் தான். தற் போது டென்னிஸ் உலகை மிரட்டி வரும் ஒசாகா, கீஸ், ஸ்டெபென்ஸ் போன்ற இளம் கறுப்பின வீராங்கனைகள் சாதிக்க முதல் காரணமே செரினாவின் ரோல் மாடல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரிக்கவும் முடியாமல், அழவும் முடியாமல்...

ஆட்டம் முடிந்தவுடன் ஆஸ்திரேலியா வீராங்கனையுடன் கைகுலுக்கி ரசிகர்களை உற்றுநோக்கினார் செரினா. ஆனால் ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று சோக முகத்துடன் கோஷங்களுடன், கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர். அதனை கண்ட செரினா சிரிக்கவும் முடியாமல், அழவும் முடியாமல் மனதளவில் திணறினார். செரினாவிற்காக அமெரிக்க ஓபன் டென்னிஸ் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் செரினா அழுத நிகழ்வை கண்டு அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் கண் கலங்கினர். முக்கியமாக செரினா மைதானத்தை விட்டு செல்லும் வரை அனைத்து நாட்டு ரசிகர்களும் உட்காராமல் நின்றபடியே இருந்தனர். செரினா சென்ற பின்பு உட்கார்ந்தனர். அமெரிக்க ஒபனால் ஆரவாரமாக இருந்த நியூயார்க் டென்னிஸ் மைதான பகுதி செரினாவின் ஓய்வு நிகழ்வால் பொதுத் தேர்வு மையம் போன்று அமைதியாக மாறியது.