ஆடவர் மட்டும் கலந்துகொள்ளும் மெக்ஸிகோ ஓபன் டென்னிஸ் தொட ரின் அரையிறுதி ஆட்டங்கள் சனியன்று நடைபெற்றன. முதல் அரையிறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் முதல் நிலை வீரரான ரஷ்யாவின் மெத்வதேவை, முன்னணி நட்சத்திரமும் சமீபத்தில் நிறைவுபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ஸ்பெயினின் ரபேல் நடால் 6-3,6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார். 2-வது அரை யிறுதி ஆட்டத்தில் பிரிட்டனின் கேமரான், கிரீ ஸின் சிட்சிபாஸை 6-4, 6-4 என்ற செட்கணக் கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார்.
இன்று இறுதி போட்டி
ஞாயிறன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நடால் (ஸ்பெயின்) - கேம ரான் (பிரிட்டன்) ஆகியோர் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
நடால் - கேமரான்
நேரம் : காலை 8:30
சேனல் : டென்னிஸ் டிவி