மியாமி ஓபன் டென்னிஸ் - அல்காரஸ் அவுட்
அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வரும் டென்னிஸ் உலகின் முக்கிய தொடரான மியாமி ஓபன் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், சனியன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் முதலி டத்தில் இருக்கும் ஸ்பெயின் நட்சத்திரம் அல்காரஸ், தரவரிசையில் 10-ஆம் இடத்தில் உள்ள இத்தாலியின் சின்னரை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பர பரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சின்னர் 6-7 (4-7), 6-4, 6-2 என்ற செட் கணக்கில் அல்காரஸை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார்.ரஷ்யாவின் மெத்வதேவ் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று இறுதி ஆட்டம்
ஞாயிறன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் மெத்வதேவை இத்தாலியின் சின்னர் எதிர்கொள்கி றார். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு நடைபெறுகிறது.
ஐபிஎல் - 2023
இன்றைய ஆட்டங்கள்
ஹைதராபாத் - ராஜஸ்தான்
நேரம் : மதியம் 3:30 மணி
இடம் : ராஜீவ் காந்தி மைதானம், ஹைதராபாத்
H H H
பெங்களூரு - மும்பை
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : சின்னசாமி மைதானம், பெங்களூரு
சேனல் : தொலைக்காட்சி - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஒடிடி - ஜியோ சினிமா
களமிறங்குகிறது “காஷ்மீர் எக்ஸ்பிரஸ்”
கிரிக்கெட் உலகின் அதிவேக பந்துவீச்சா ளர்களில் ஒருவரும், “காஷ்மீர் எக்ஸ் பிரஸ்” என அழைக்கப்படும் இந்திய அணி வேக பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் கடந்த சீசனை போலவே நடப்பு ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணிக்காக விளையாட உள்ளார். இவரது 150 கிமீ-க்கும் அதிகமான, மிரட்டலான பந்துவீச்சை காண ரசிகர்கள் அதிகளவில் குவிவார்கள் என்ப தால் ஐபிஎல் தொடரில் உம்ரான் மாலிக் விளையாடும் ஆட்டத்திற்கு மட்டும் தனி மவுசு உள்ளது.
மோடி மைதானத்தில் கேட்ச் கூட பிடிக்க முடியவில்லை
கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான குஜ ராத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் தொடக்க ஆட்டம் நடை பெற்றது. மைதானத்தில் நவீன செயல் முறை என்ற அடிப்படையில் துபாய் கிரிக்கெட் மைதானம் போன்று சுற்று மின்விளக்குகள் (மைதான மேடை யை சுற்றிலும் இடைவெளி இல்லா மல்) அமைக்கப்பட்டுள்ளன. துபாய் மைதானத்தில் சுற்று மின்விளக்குகள் ஒரே வெளிச்சத்தில் ஒரே அமைப்பில் உள்ளன. ஆனால் நரேந்திர மோடி மைதானத்தில் சுற்று மின்விளக்கு கள் ஏதோ திருவிழா சீரியல் பல்பு போன்று ஒரு வரிசை பல்புகள் அதிக வெளிச்சமாகவும், மறுபக்க பல்புகள் மந்தமான வரிசைகளாகவும் உள்ளன. இதனால் விண்ணை நோக்கி எழும்பி தரையிறங்கும் பந்துகளை கேட்ச் செய்ய முடியாமல் வீரர்கள் திணறு கின்றனர். ஐபிஎல் முதல் ஆட்டத்தில் குஜராத் வீரர் சப்மன் கில் அடித்த பந்தை சென்னை வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மிகவும் சிரமப்பட்டு கேட்ச் பிடித்து சைகை மூலம் பல்பு வெளிச்சம் சரியில்லை எனக் கூறி னார். நரேந்திர மோடி மைதானத்திற்கு ரூ.800 கோடிக்கு மேல் செலவு செய்து கட்டப்பட்டதாக குஜராத் மற்றும் ஒன்றிய பாஜக அரசுகள் மிக வும் வரலாற்று விஷயமாக பேசியது. ஆனால் உண்மையான விஷயம் என்னவென்றால் சாதாரண பல்பு வெளிச்சம் கூட சரியில்லை என்பது தான்.
வில்லியம்சன் விலகல்
நியூசிலாந்து அணியின் கேப்டனும், குஜராத் அணியின் வீரருமான கனே வில்லியம்சன் சென்னை அணிக் கெதிரான ஆட்டத்தின் பொழுது ருது ராஜ் கெய்க்வாட் விளாசிய பந்தை பவுண்டரி எல்லையில் தடுக்க முயன்ற பொழுது காயமடைந்து சம்பவ இடத்தி லேயே சுருண்டு விழுந்தார். குஜராத் அணி பேட்டிங்கின் பொழுது வில்லி யம்சன் களமிறங்கவில்லை. இந்நிலை யில், வில்லியம்சனின் காயம் அதிக வீரியமாக உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து 16-வது சீசன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி யுள்ளதாக அறிவித்துள்ளார். பேட் டிங், கேப்டன்ஷிப் அனுபவம்,ஆட்ட நுணுக்க ஆலோசனைகள் என அனைத்திலும் அனுபவமிக்க வில்லி யம்சன் விலகியது குஜராத் அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படு கிறது என்பது குறிப்பிடத்தக்கது.