ஆண்டின் முதல் கிராண்ட்ஸ் லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா - போபண்ணா ஜோடி தனது காலிறுதி ஆட்டத்தில் டேவிட் (ஸ்பெயின்) - ஜலீனா (லாத்வியா) ஜோடியை எதிர்கொள்ள தயாராக இருந்த நிலையில், காயம் காரணமாக டேவிட் - ஜலீனா ஜோடி விலக, வாக்ஓவர் அடிப்படையில் அதிர்ஷ்ட வாய்ப்புடன் இந்தியாவின் சானியா - போபண்ணா ஜோடி அரை யிறுதிக்கு முன்னேறியது.
ரைபகினா அபாரம்
மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் 17-ஆம் நிலை வீராங்கனையான லாத்வியா வின் ஜலீனாவை 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அரை யிறுதிக்கு முன்னேறினார் கஜகஸ்தா னின் ரைபகினா. கடந்த ஆண்டு விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரை கைப்பற்றிய ரைபகினா ஆஸ்திரேலிய ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறு வது இதுவே முதல் முறையாகும். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் தர வரிசையில் 24-வது இடத்தில் உள்ள பெலாரசின் அசரென்கா, 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பெகு லாவை 6-4, 6-1 என்ற செட் கணக்கில் புரட்டியெடுத்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
காஞ்சாநோவ் கலக்கல்
ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் காஞ்சாநோவ் (தரவரிசை 18), அமெரிக்காவின் செபா ஸ்டியனை (தரவரிசை 29) 7-6 (7-5), 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினர்.
வாக்ஓவர் என்றால் என்ன?
வேறு எந்த விளையாட்டிலும் இல் லாமல் டென்னிஸ் விளை யாட்டில் மட்டும் விளையாட்டு தொடர்பான வார்த்தை இல்லாமல் வாக்ஓவர் (WALKOVER)என்ற பொதுவான வார்த்தையை பயன்படுத்துவார்கள். வாக்ஓவர் என்பதற்கு பொதுவான அர்த்தம், ”ஒரு போட்டியில் எளிதாகப் பெறும் வெற்றி” என்பதுதான். இதே அர்த்தத்தின் படி தான் டென்னிஸ் விளை யாட்டில் ஒரு விதி தொடர்பான வார்த்தை யாக பயன்படுத்தப்படுகிறது. காயம் மற்றும் இதர பிரச்சனைகளால் போட்டி துவங்கு வதற்கு முன்பே ஒரு வீரர்-வீராங்கனைகள் அல்லது ஒரு ஜோடி பங்குபெற முடியாமல் போனால் வாக்ஓவர் முறையில் எதிரணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். இதுதான் வாக்ஓவர் முறை யாகும். இந்தியாவின் சானியா மிர்ஸா - போபண்ணா ஜோடி வாக்ஓவர் முறையில் அரையிறுதிக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.