games

img

விளையாட்டு செய்திகள்

112 ஆண்டு பழமையான டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஆஸ்திரேலியாவின் எப்டன் உடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். புதனன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில்போபண்ணா ஜோடி அர்ஜெண்டினாவின் மேக்சிமோ - ஆண்ட்ரஸ் ஜோடியை
எதிர்கொண்டது. வெறும் 1:46 மணிநேரத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற போபண்ணா - எப்டன்ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

டயானா அபாரம்
மகளிர் ஒற்றையர் பிரிவு 3-ஆவது காலிறுதி ஆட்டத்தில் தரவரிசை யில் இல்லாத வீராங்கனைகளான செக்குடியரசின் லிண்டா நோஸ்க்கோவா, உக்ரைனின் டயானா மோதினார்கள். நடப்பு சீசனில் வித்தியாசமான அதிரடியை வெளிப்படுத்தி வரும் உக்ரைனின் டையானா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேற, 19 வயது இளம் வீராங்கனையான லிண்டா நோஸ்க்கோவா தொடரிலிருந்து வெளியேறினார்.

3:59 மணிநேரம் போராட்டம்
ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் மெத்வதேவ், தரவரிசையில் 9-ஆவது இடத்தில் உள்ள போலந்தின் ஹர்கா ஸ்ஜை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7-6 (7-4), 2-6, 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் ரஷ்யா வின் மெத்வதேவ் வெற்றி பெற்று அரை யிறுதிக்கு முன்னேறினார். 3:59 மணி நேரம் போராடிய போலந்தின் ஹர்காஸ்ஜ் ரசிகர்களின் பலத்த பாராட்டுகளுக்கு இடையே தொடரிலிருந்து விடைபெற்றார்.

கொளுத்தும் வெயில் : திணறும் வீரர் - வீராங்கனைகள்

பருவநிலை மாற்றம் காரணமாக ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் கொளுத்தி வருகிறது. ஆஸ்திரேலிய ஓபன் நடைபெற்று வரும் இடமான மெல்போர்னில் சராசரி அளவை விட (25 டிகிரி) 5 டிகிரி அளவிற்கு மேல் அதாவது 31 டிகிரிக்கு வெயில் கொளுத்தி வருகிறது. இந்த வெயில் ஆஸ்திரேலியாவில் மிக அதிகம் என்பதால்,  திறந்தவெளி யில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடி வரும் வீரர் - வீராங்கனைகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வீரர்களை விட வீராங்கனை கள் வெயிலை தாக்குப்பிடிக்க முடியாமல் கடுமையாக திணறுகின்றனர். முக்கியமாக மித வெப்ப மண்டல பகுதியான ஐரோப்பா கண்டங்களில் இருந்து வந்துள்ள வீராங்கனைகள் வெயிலை சமாளிக்க முடியாமல் அதிக நேரம் ஓய்வு (பிரேக்கிங்) எடுக்கிறார்கள்.