கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் தற்போது 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
ஆடவர் ஒற்றையர்
ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரரும் 2 முறை கிராண்ட்ஸ்லாம் (அமெரிக்கா, விம்பிள்டன்) பட்டம் வென்றவருமான பிரிட்ட னின் ஆன்டி முர்ரே ஜப்பான் வீரர் டேனி யலிடம் 6-4,6-4,6-4 என்ற செட் கணக்கில் போராடி வீழ்ந்தார். வெளியேறிய முர்ரே ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் 5 முறை இறுதிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னணி அதிரடி வீரர் பல்கேரியாவின் டிமிட்ரோ பிரான்ஸ் வீரர் பைரேவிடம் 4-6,4-6,7-6(7-4),6-7(2-7) என்ற செட் கணக்கில் போராடி வீழ்ந்தார். டிமிட்ரோவை தோற் கடித்த பைரே பெரியளவில் நட்சத்திர வீரர் இல்லை. ஆனால் போராட்டக்குணத்துடன் புத்திகூர்மையாக விளையாடக்கூடியவர்.
மகளிர் ஒற்றையர்
மகளிர் ஒற்றையர் பிரிவில் அதிகம் எதிர்பார்த்த ஜெர்மனியின் முகுருஜா பிரான்ஸ் வீராங்கனை அலிஜேவிடம் 3-6,3-6 என்ற செட் கணக்கில் போராடி வீழ்ந்தார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென் றால் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள முகுருஜா, தரவரிசையில் இல்லாத அலிஜேவிடம் வீழ்ந்தது தான். இதே போல தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள எஸ்டோனியாவின் கொன்டாவெயிட்டை, டென்மார்க் நாட்டி புதுமுக வீராங்கனை கிளாரா 6-2,6-4 என்ற நேர் செட் கணக்கில் அதிரடி ஆட்டத்தின் மூலம் வீழ்த்தினார்.
சானியா மிர்சா முன்னேற்றம்
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா வின் சானியா மிர்சா, அமெரிக்க வாழ்இந்திய ரான ராஜீவ் ராம் உடன் ஜோடி சேர்ந்து தனது முதல் சுற்றில் செர்பியாவின் க்ருனிக் - நிக் கோலா ஜோடியை 6-3,7-6 என்ற செட் கணக் கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.