games

img

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – இறுதி போட்டிக்கு முன்னேறிய ரபேல் நடால்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ரபேல் நடால், இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

கிராண்டஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பேர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் நட்சத்திரமான ரபேல் நடால், இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெர்ட்டினியை எதிர்கொண்டார்.  

இதில் முதல் 2 செட்டை நடால் கைப்பற்றினார். 3ஆவது செட்டை மேட்டியோ பிரிட்டினி தன்வசப்படுத்தினார். அதனைதொடர்ந்து 4ஆவது செட்டை ரபேல் நடால் தன்னை எதிர்த்து விளையாடிய இத்தாலி வீரர் மேட்டியோ பிரிட்டினியை 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். இதன் மூலம் அவர் ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

35 வயதான ரபேல் நடால் ஆரம்பம் முதலே போட்டியில் ஆதிக்கம் செலுத்தினார். 3ஆவது செட்டில் சிறிது தடுமாறினாலும், 4ஆவது செட்டில் மீண்டும் நடால் ஆதிக்கம் செலுத்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

2வது அரையிறுதிப் போட்டியில் மெட்வெடேவ் மற்றும் சிட்சிபாஸ் மோதுகின்றன. இதில் வெற்றி பெறுபவர்கள் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் நடாலை எதிர்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

;