ஆண்டின் முதல் கிராண்ட்ஸ் லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் தற்போது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத் தில் டென்னிஸ் உலகின் முதல் நிலை வீராங்கனையும், போலந்து நாட்டவரு மான ஸ்வியாடெக்கை, தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள கஜகஸ்தா னின் ரைபகினா 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் புரட்டியெடுத்து காலிறு திக்கு தகுதி பெற்றார். தரவரிசையில் 7-ஆம் இடத்தில் உள்ள முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் கவுபை, லாத்வியா வின் ஜலீனா (தரவரிசை - 17) 7-5, 6-3 என்ற எட் கணக்கில் வீழ்த்தி காலி றுதிக்கு முன்னேறினார். அமெரிக்கா வின் பெகுலா, செக்குடியரசின் கெரெஜ்சிகோவாவை 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
பெலிக்ஸ் அவுட்
ஆடவர் ஒற்றையர் பிரிவில் தரவரி சையில் 6-ஆம் இடத்தில் உள்ள கனடா வின் பெலிக்ஸ் தனது 4-வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் இல்லாத செக்குடியரசின் ஜிரியிடம் 6-4, 3-6, 6-7 (2-7), 6-7 (3-7) போராடி வீழ்ந்தார். கிராண்ட்ஸ்லாம் தொடரில் முதன் முறையாக காலிறுதிக்கு முன்னேறி புதிய முன்னேற்றத்தை கண்டார் ஜிரி. ரஷ்யாவின் காஞ்சாநோவ் 6-0, 6-0, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஜப்பா னின் நிஷியோகாவை வீழ்த்தி காலி றுதிக்கு முன்னேறினார். தரவரிசை யில் 10-ஆம் இடத்தில் உள்ள போலந்தின் ஹூபர்ட், அமெரிக்காவின் செபாஸ்டியனிடம் (தரவரிசை 29) 6-3, 3-6, 2-6, 6-1, 6-7 (7-10) என்ற செட் கணக்கில் வீழ்ந்தார்.
இந்திய ஜோடிகள் வெளியேற்றம்
ஆடவர் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இந்தி யாவின் நெடுஞ்சழியன் - பாலாஜி ஜோடி 4-6, 4-6 என்ற செட் கணக்கில் பிரா ன்சின் சார்டி - மார்ட்டின் ஜோடியிடம் வீழ்ந்தது. மகளிர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சானி யா மிர்சா, கஜகஸ்தானின் டேனிலினா ஜோடி, அலிசன் (பெல்ஜியம்), கலினினா (உக்ரைன்) ஜோடியிடம் 4-6, 6-4, 2-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்து தொடரிலிருந்து வெளியேறியது.
உலகக்கோப்பை ஹாக்கி (இந்தியா - 2023)
இன்றைய கிராஸ்-ஓவர் ஆட்டங்கள்
15-வது சீசன் ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தின் 2 நகரங்களில் (புவனேஸ்வர், ரூர்கேலா) நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் தற்போது கிராஸ்-ஓவர் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திங்களன்று 2 கிராஸ்-ஓவர் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
ஜெர்மனி - பிரான்ஸ்
நேரம் : மாலை 4:30 மணி
அர்ஜெண்டினா - தென்கொரியா
நேரம் : இரவு 7:00 மணி
இரண்டு ஆட்டங்களும் புவனேஸ்வரில்..