games

img

டேபிள் டென்னிஸ்: சாதிக்கும் எத்திராஜன்!

விளையாட்டில் சாதிப்பதற்கு வயது எப்போதும் ஒரு தடை இல்லை என்பதை பலரும் நிரூபித்து வருகின்றனர். ஒமன் நாட்டின் மஸ்கட் நகரில் உலக அளவிலான மாஸ்டர்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. இது 69 நாடுகளிலுள்ள 40 வயது முதல் 90 வயது வரையுள்ள  1600க்கும் அதிகமான வீரர்களும், வீராங்கனைகளும் கலந்துகொண்ட உலக விளையாட்டு திருவிழாக மாறியது.  சீனா, கொலம்பியா, டென்மார்க், இங்கிலாந்து, ஸ்பெயின்,ஆஸ்திரேலியா, வங்கதேசம், பிரேசில், கனடா, பின்லாந்து, ஜெர்மனி, இந்தியா, ஈரான், ஜப்பான், ஒமன், போலந்து, சிங்கப்பூர், ஸ்விடன் நாடுகளில் இருந்து ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் சென்னையைச் சேர்ந்த எத்திராஜன் கலந்துகொண்டனர்.  மாஸ்டர் டேபிள் டென்னிஸ் தொடரின் மாநில அளவிலான போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற, இவர் சைதாப்பேட்டையில் வசித்து வருகிறார். பள்ளிச் சிறுவர்களுக்கு டேபிள் டென்னிஸ் விளையாட்டு பயிற்சியும் அளித்து வருவதால் வங்கிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்றவர் இவர். தனது பயணத்தின் நோக்கம், வெளி நாட்டு வீரர்களுடன் விளையாடிய அனுபவம், அடுத்த இலக்கு உள்ளிட்டவை பற்றி தீக்கதிர் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

உலக அளவில்டேபிள் டென்னிஸ் விளையாட்டின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள ஒமன் நாட்டு பயணம் மிகவும் பயனுள்ளதாகஅமைந்தது. அதிவேக (Fastest)  பந்து விளையாட்டில்முதலிடத்தை வகிக்கும் டேபிள் டென்னிஸ் உலக அளவில் மிகவும் பிரலமான விளையாட்டாக எப்படியெல்லாம் வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை தெரிந்துகொள்ள உதவியாக இருந்தது. இது எனது வெளிநாட்டு முதல் பயணம் மட்டுமல்ல உலக அளவில் கலந்து கொண்ட குவைத், குரோஷியா, போலந்து வீரர்களை தகுதி சுற்றில் எதிர் கொண்டேன்.  வெளிநாட்டு வீரர்கள் வேகத்தில் அசத்தினர். வங்கி ஊழியர்களுக்கான மாநிலம், அகில இந்திய தொடர்களின் ஒற்றையர் மற்றும் இரட்டையர் குழு ஆட்டங்களில் தொடர்ந்து பல்லாண்டு காலம் சாம்பியன் பட்டத்தையும் முதலிடத்தையும் தக்க வைத்தது எனக்கு பக்கபலமாக இருந்தது.  சர்வதேச மாஸ்டர் தொடரில் நான் இடம் பிடித்திருந்த குழுவில் 2 ஆவது இடம் பிடித்து முக்கிய சுற்றுக்கு (Main Draw) தகுதி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறேன். தகுதி சுற்றில் போலந்து வீரரிடம் வெற்றி வாய்ப்பை நூலிழையில் இழந்தாலும்  உலக தரவரிசை பட்டியலில் 64 இடங்களுக்குள் முதல்முறையாக இடம் பிடித்திருப்பதை மேலும் பெருமையாக கருதுகிறேன். இந்தத் தொடரில் பங்கேற்றவர்கள் 95 விழுக்காட்டினர் தொழில் முறை விளையாட்டு வீரர்கள். என்னைப் போன்று ஓரிருவர் மட்டுமே பயிற்சியாளராக இருந்து கொண்டு போட்டிகளில் விளையாடினோம். பயிற்சியாளராக மாறிய பிறகு முதன்முதலாக சர்வதேச அளவில் விளையாட்டு வீரராக களத்தில் இறங்கி விளையாடியது மேலும் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது. தொடர்ந்து உலக அளவில்நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்றும் முடிவு செய்து இருக்கிறேன். 

உலக டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பில்(ITTF) சான்றிதழ் பெற்ற பயிற்சியாளராகிய நான்,தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டுமேலும் பல மாணவர்களைடேபிள் டென்னிஸ்விளையாட்டில்ஈடுபடுத்துவேன். அரசுகளும் டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பும் வணிக நிறுவனங்களும் தனியார் கம்பெனிகளும் வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் தாராளமாக ஸ்பான்சர் செய்ய முன்வர வேண்டும். தமிழ்நாட்டில் ஏராளமான மாணவர்கள் டேபிள் டென்னிஸ் விளையாட்டுக்கு ஆர்வத்துடன் வருகின்றனர். பயிற்சி பங்கேற்கின்றனர். அதன் தொடர்ச்சியாக தங்களை மேலும் செழுமைப்படுத்திக் கொள்ள பலரால் முடியவில்லை. இதனால் விளையாட்டை தொடர்வதில்லை. போட்டிகளிலும் கலந்து கொள்ள வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.  விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் ஒன்றிய, மாநில அரசுகளும் முழுமையான கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்தால் மாஸ்டர் தொடர் மட்டுமல்ல, டேபிள் டென்னிஸ் விளையாட்டில் சீனா, கொரியா, தாய்லாந்து, ஜப்பான், போலந்து, கனடா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு இணையாக உருவாக முடியும். 150 நாடுகளுக்குமேலாக விளையாடும் டேபிள் டென்னிஸ் விளையாட்டிற்கு உலக அளவில் அதிகமுக்கியத்துவம் அளிக்கப்படுவதை ஒமன் நாட்டில் நடைபெற்றபோட்டியின் மூலம் தெரிந்து கொண்டேன்.இந்தியாவும் வரும் காலங்களில் முக்கியத்துவம் கொடுத்து வீரர்களை உற்சாகப் படுத்தவேண்டும். அப்போதுதான் வெளிநாட்டு வீரர்களுக்கு இணையாக நமது வீரர்களும் முழுமையாக ஆளுமை செலுத்த முடியும் என்றார்.

;