games

img

உலக சாம்பியனுக்கு மீண்டும் அதிர்ச்சி அளித்த தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா

இணையம் வழியாக நடை பெற்று வரும் செஸ்ஸ பிள் மாஸ்டர்ஸ்ரேபிட்செஸ் போட்டியில் உலக சாம்பியனும் நார்வே நாட்டு வீரருமான கார்ல்சனை எதிர் கொண்டார் தமிழ்நாட்டின் ்பிரக் ஞானந்தா.  40-வது நகர்த்தல் வரை ஆட்டம் டிராவை நோக்கி பயணித்த நிலையில், அடுத்த சில நொடிகளில் கார்ல்சன் ஒரு தவறை செய்தார். அதனை சாதகமாக பயன்படுத்தி பிரக்ஞானந்தா வெற்றி பெற்று அசத்தினார். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் இணையம் வழியாக நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் 8-வது சுற்றில் கார்ல்சனைத் தோற்கடித்து செஸ் உலகில் பரபரப்பை ஏற்படுத்தினார் பிரக்ஞானந்தா. பிரக்ஞானந்தா (16 வயது) தற்போது 11-வது வகுப்புத் தேர்வுக்காகத் தயாராகிக் கொண்டு வருகிறார்.

;