மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் 2022 சீசனின் 5-வது பருவ தொட ராக ஜூலியஸ் பேர் கோப்பை என்ற பெயரில் இணையம் வழியாக செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியாவின் நட்சத் திர நாயகனும், தமிழ்நாடு வீரரு மான பிரக்ஞானந்தா நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று, காலி றுதி ஆட்டத்தில் வின்சென்ட் கீமருடன் (ஜெர்மனி) மோதினார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கீமர் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் பிரக்ஞானந்தாவை வீழ்த்தி அரை யிறுதிக்கு முன்னேற, அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார் பிரக்ஞானந்தா. மற்றொரு இந்திய வீரரான அர்ஜுன் எரிகைசி, யூவை (சீனா) 3.5 - 2.5 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.