games

img

வித்தியாசமான குற்றச்சாட்டை கூறியுள்ள கார்ல்சன்

2022 சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் தொட ரின் 3-வது சுற்றில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் (நார்வே), அமெரிக்காவைச் சேர்ந்த ஹான்ஸ் நீம னிடம் வீழ்ந்தார். இன்னும் சுற்றுகள் மீதம் உள்ள நிலையில், வித்தியாசமான விளக்கத்துடன் தொடரிலிருந்து விலகு வதாக கார்ல்சென் அறிவித்துள்ளார். கார்ல்சன் கூறிய வித்தியாசமான விளக்கம் யாதெனில் ஹான்ஸ் நீமன் மோசடி செய்துள்ளதாக கூறியுள்ளார். தொடரிலிருந்து பாதியிலேயே விலகி யது மற்றும் கார்ல்சனின் மோசடி தொடர்பான குற்றச்சாட்டு கருத்து செஸ் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து கார்ல்சன் அளித்த விளக்கத்தில் (சுருக்கம்),” செஸ் விளையாட்டில் மோசடி செய்வது மிகப்பெரிய விஷயம் என்பதால் விளை யாட்டுக்கே ஆபத்தை  ஏற்படுத்துகிறது. மோசடி செய்பவர்களைத் தடுக்கும் முறைகளைப் பலப்படுத்த செஸ் நிர்வா கிகள் முயல வேண்டும். சின்க்ஃபீல்ட் கோப்பைப் போட்டிக்குக் கடைசி நேர த்தில் நீமன் அழைக்கப்பட்டபோது அந்தப் போட்டியிலிருந்து விலகலாமா என நினைத்தேன். எனினும் விளையாடி னேன். எனக்கு எதிராக விளையாடிய போது அவரிடம் பதற்றம் வெளிப்பட வில்லை, முக்கியமான தருணங்களி லும் ஆட்டத்தில் அவருடைய முழு கவனமும் இல்லை. என்னுடைய எண்ணத்தை அவரது அலட்சியம் மாற்றியது. ஆனால் நீமனிடமிருந்து தெளிவான விளக்கம் பெறாமல், விளக்கமாகப் பேச முடியாது. என்னு டைய நடவடிக்கைகளை வைத்துத் தான் என்னால் பேச முடியும். இனி மேல் என்னால் நீமனுக்கு எதிராக விளையாட முடியாது என்பதை என்னு டைய நடவடிக்கைகள் தெளிவாகத் தெரிவித்துள்ளன. இந்த விவகா ரத்தில் உண்மை வெளிவரும் என நம்பு கிறேன்” எனக் கூறியுள்ளார்.

செஸ் விளையாட்டில் மோசடி நடக்குமா?

விளையாட்டு உலகில் மோசடி என்ற வார்த்தைகள் பிரபலமானது தான். கிரிக்கெட், கால்பந்து, பேஸ்பால் போன்ற விளையாட்டுகளில் அதிகம் நடை பெறும். ஆனால் செஸ் விளையாட்டில் மோசடி என்ற வார்த்தைகள் அதிகம் இருப்பதில்லை. காரணம் மோசடி நடைபெறுவதற்கான வேலை அங்கு இல்லை. போட்டியில் நடைபெறும் 2 நபர்கள் யாராவது ஒருவர் காய்களை நகர்த்தும் பொழுது உற்றுநோக்காமல் விட்டுவிட்டால் தான்  பிரச்சனை ஏற்படும். அதுவும் தற்போது கணினி தொழில் நுட்பத்துடனே செஸ் போர்டுகள் உள்ளன. ஆட்டத்தின் ஒவ்வொரு ஆட்டமும் கண்காணிக்கப்படுகிறது. ஒருவேளை  கணினி தொழில்நுட்பத்தில் “ஹேக் ஆப்சன்” மூலம் எதுவும் முறைகேடு நடந்தால் தான் உண்டு. வேறு வழிகளில் செஸ்  விளையாட்டில் மோசடி நடக்க வாய்ப்பு இல்லை. கார்ல்சன்  ஹான்ஸ் நீமனின் செயல்பாடு, போட்டியில் அவர் இருக்கும் மனநிலை, சூழ்நிலையை மட்டுமே மோசடியின்  அடிப்படையாக கூறுகிறார். இது முற்றிலும் புரியவில்லை.  இந்த விவகாரத்தை சர்வதேச செஸ் சம்மேளனம் விரை வில் விசாரணைக்கு எடுக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது. விசாரணையில் மட்டுமே செஸ் உலகில் மோசடி என்ற வார்த்தைக்கான அர்த்தம் முற்றிலும் வெளியாகும். அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்.

;