games

img

சென்னையில் ஜூலை 5 முதல் தேசிய குத்துச்சண்டை  

5வது தேசிய ஜூனியர் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 5 முதல் 11 வரை நடைபெற உள்ளது.  

இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில், 5வது தேசிய இளையோர் குத்துச்சண்டை போட்டி சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த போட்டி ஜூலை 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதிவரை நடைபெறும் என தமிழ்நாடு குத்துச்சண்டை கழக செயலாளர் எம்.எஸ்.நாகராஜன் தெரிவித்தார்.

ஆண்களுக்கு 13 வகையான உடல் எடைப்பிரிவிலும், பெண்களுக்கு12 வகையான உடல் எடைப்பிரிவிலும் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் இந்தியா முழுவதிலிருந்து 33 மாநில பிரிவுகளை சேர்ந்த 800 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.  

தமிழக மகளிர் பிரிவு:  

பிரிவில்லோஷினி(சென்னை), பூவிதா(புதுக்கோட்டை), மதுமிதா(திருவள்ளூர்), ஜீவா(புதுக்கோட்டை), ஸ்நேகா(திருச்சி), மாலதி(புதுக்கோட்டை), அனுசுயா(காஞ்சிபுரம்), ஸ்ரீநிதி(சென்னை), எம்.மதுமிதா(திருவள்ளூர்), ஜெயஸ்ரீ(திருவள்ளூர்), அபிநய சரஸ்வதி(திருவள்ளூர்), பிரிஸ்கிலா(கன்னியாகுமரி) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  

தமிழக ஆடவர் பிரிவு:  

யுவேஸ்வரன் (சென்னை), விஸ்வஜித் (கோவை), நவீன்குமார் (சென்னை), கவியன் (திருவள்ளூர்), திருநாவுக்கரசு, சுபாஷ்வசந்த், தில்லி பாபு, கபிலன், பூபாலன் (சென்னை), தியாகராஜன் (திருவள்ளூர்), லோஷன் (சென்னை), ஸ்ரீவெங்கடேஷ் (கடலூர்), சாம் பால் ராஜ் (திருவள்ளூர்) ஆகியோர் பங்கேற்கின்றனர்.

;