games

img

விளையாட்டு...

இளையோர் உலகக்கோப்பை கால்பந்து 2023
அரையிறுதியில் உருகுவே

20 வயதிற்குட்பட்டோர் பங்கேற்கும் இளையோர் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 23-வது சீசன் அர்ஜென்டினாவில் நடைபெற்று வருகிறது.  தற்போது இந்த தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திங்க ளன்று (இந்திய நேரப்படி - அதி காலை) நடைபெற்ற கடைசி காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான உருகுவே, அமெரிக்காவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. ஏற்கெனவே தென் கொரியா, இஸ்ரேல்,  இத்தாலி ஆகிய அணிகள் அரை யிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், அரையிறுதி ஆட்டங்கள் ஜூன் 8 அன்று தொடங்குகிறது.

அரையிறுதி ஆட்டங்கள்

உருகுவே - இஸ்ரேல் 
ஜூன் 8 (வியாழன்) - இரவு 11:30 மணி
இத்தாலி-தென் கொரியா
ஜூன் 9 (வெள்ளியன்று அதிகாலை) - 2:30 மணி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : காலிறுதியில் ஜபியூர்

களிமண் தரையில் நடை பெறும் ஒரே கிராண்ட்ஸ் லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்சு  ஓபன் தொடரின் 92-வது சீசன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடை பெற்று வருகிறது.  இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள  துனிசியாவின் ஜபியூர், தரவரிசை யில் இல்லாத அமெரிக்காவின் பெர்ராவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடை பெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் பெர்ராவை வீழ்த்தி ஜபியூர் காலிறுதிக்கு முன்னேறினார்.

ஒடிசா ரயில் விபத்து

பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறார் சேவாக்

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அருகேவுள்ள பாகநாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த வெள்ளியன்று (ஜூன் 2) இரவு 6.55 மணிக்கு கோரமண்டல் விரைவு ரயில் (ஷாலிமர் - சென்னை சென்ட்ரல்), யஷ்வந்த்பூர் (பெங்களூரு - ஹவுரா) விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாதில் 275 பேர் பலியாகினர். 1,175 பேர் காயமடைந்து  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் பள்ளிக் கல்விச் செலவை ஏற்பதாக இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில்,”ஒடிசா ரயில் விபத்து அனைவருக்குமே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரமான நேரத்தில், இந்த கோர ரயில் விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு என்னால் முடிந்த உதவி, கல்வி அறிவை கொடுப்பதுதான். “சேவாக் இன்டர்நேஷனல் உறைவிட பள்ளியில்” இந்த குழந்தைகள் அனைவருக்கும் இலவசமாக கல்வி வழங்கப்படும். மேலும், மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும், மருத்துவக் குழுவினருக்கும் மற்றும் ரத்த தானம் செய்ய முன்வந்த தன்னார்வலர்களுக்கும் எனது சல்யூட். நாம் இதில் ஒன்றாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

;