games

img

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸ்திரேலிய அணி சாம்பியன்

ஓவல், ஜூன் 11-  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.  இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 469 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  இதன்மூலம் 2-ஆவது இன்னிங்சில் 173 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து, இந்திய அணிக்கு 444 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.  அடுத்து 2-ஆவது இன்னிங்சிசை தொடங்கிய இந்திய அணி ஞாயிறன்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்தில் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 209 வித்தியாசத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. இந்தியா 2-ஆவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது.