games

img

விளையாட்டு...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.10 கோடி

டெஸ்ட் போட்டியின் சுவா ரஸ்யத்தை அதிகரிக்கும் வகையில், சர்வதேச டெஸ்ட் போட்டி களை ஒருங்கிணைத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலகக்கோப்பை தொடர் சர்வதேச கிரிக்கெட் வாரியத் தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த  தொடரின் முதல் சீசனில் நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம்வென்ற நிலையில், 2-வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.  முதல் சீசனை போலவே 2-வது  சீசனிலும் இந்திய அணி இறுதிப்போட்டி க்கு முன்னேறியுள்ள நிலையில், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி ஜூன் 7 அன்று இங்கி லாந்து நாட்டின் லண்டன் ஓவல் மைதா னத்தில் தொடங்குகிறது.  இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பி யன்ஷிப் தொடருக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்பி யன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.10 கோடியும், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6.55 கோடியும் என பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 3-வது இடம் பிடித்த தென் ஆப்பிரிக்க அணிக்கு ரூ.3.71 கோடியும்,  4-வது  இடம் பிடித்த இங்கிலாந்து அணிக்கு ரூ.2.88 கோடியும், 5-வது இடம் பிடித்த  இலங்கை அணிக்கு ரூ.1.65 கோடி என பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. இதுபோக 6 முதல் 9 இடங்களை நியூ சிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய  அணி களுக்கு தலா ரூ.82 லட்சம் பரிசுத் தொகையாக கொடுக்கப்பட உள்ளது.

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் அரையிறுதியில் பி.வி.சிந்து

பேட்மிண்டன் உலகின் முக்கிய சர்வதேச தொடர்களில் ஒன்றான மலேசியா மாஸ்டர்ஸ் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது.  இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் ஜாங்யி மேன் எதிர்கொண்டார். தொடக்கம் முதலே  பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-16, 13-21, 22-20 என்ற செட் கணக்கில் ஜாங்யி-யை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். சனியன்று நடைபெறும் அரையிறுதியில் இந்தோனேசிய வீராங்கனை டுன்சங்கை எதிர்கொள்கிறார் பி.வி.சிந்து. பிரனோய் கலக்கல் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியா வின் பிரனோய் 25-23, 18-21, 21-13 என்ற செட் கணக்கில் ஜப்பானின் ரிஷிமோடோவை வீழ்த்தி அறையிறுதிக்கு முன்னேறினார். இதே பிரிவின் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் வீரர் அதிநாட்டோவிடம், இந்தியாவின் நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-16, 16-21, 11-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

ஐபிஎல் 2023 இன்று ஆட்டங்கள் இல்லை

16-வது சீசன் ஐபிஎல் தொடர்  இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் வெள்ளியன்று நிறைவு  பெற்றன. இனி கடைசி கட்ட ஆட்ட மான இறுதி ஆட்டம் மே 28 அன்று அகமதாபாத்தில் நடைபெறும் நிலை யில், பிளே ஆப் சுற்று ஆட்டத்தின் களைப்பை போக்க சனியன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இளையோர் உலகக்கோப்பை கால்பந்து 

அர்ஜெண்டினா 2023

இன்றைய ஆட்டங்கள்
பிரேசில் - நைஜீரியா
நேரம் : இரவு 11:30  மணி
டோமினிக்கன் குடியரசு - இத்தாலி
நேரம் : இரவு 11:30  மணி 
ஜப்பான் - இஸ்ரேல்
நேரம் : இரவு 11:30 மணி
கொலம்பியா - செனகல்
நேரம் : இரவு 11:30 மணி

4  ஆட்டங்களும் - எஸ்டடியோ மையத்தில் உள்ள மைதானங்களில் நடைபெறுகிறது.