games

img

விளையாட்டு...

உலக ரேபிட் செஸ் -  இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன்

செஸ் உலகின் முக்கிய தொ டர்களில் ஒன்றான உலக ரேபிட் செஸ்  சாம் பியன்ஷிப் தொடர் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த தொடரின் மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கொனேரு ஹம்பி, இந்தோ னேசியாவை சேர்ந்த ஐரீன் சுகந்தரை எதிர்கொண்டார். இறுதி ஆட்டத்தின் முடிவில் கொனேரு ஹம்பி 11 புள்ளிகளில் 8.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். இந்த வெற்றியின் மூலம் சீனாவின் ஜூ வென்ஜூனுக்கு பிறகு அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் கொனேரு ஹம்பி இரண்டாவது இடத்தில் உள்ளார். முன்னதாக 2019ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் தொடரிலும் ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார். அதே போல 2012ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற தொடரில் வெண்கல பதக்கமும், கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானில் நடை பெற்ற போட்டியில் வெள்ளி பதக்கமும் வென்று இருந்தார். ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த கொனேரு ஹம்பி (37) பிரசவம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் பல்வேறு தொடர்களில் பங்கேற்காமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் செஸ் விளையாட்டில் களமிறங்கி சாம்பியன் பட்டம் வென்று அசத்தி யுள்ளார் என்பது குறிப்பிடத்தக்து.

டெத் லிப்டில் பிராங்க் - இளைஞர்களின் உயிரில் விளையாடும் அனாடோலி

தீவிர உடற்பயிற்சி விரும்பியான அனாடோலி என்பவர் தனது தன்னை உலகளவில் பிரபலப் படுத்தி கொள்ளவும், யுடியூப் லைக்ஸ் மற்றும் வருவாய்க்காகவும் டெத் லிப்ட்  (death lift) பிராங்க் (யாருக்கும் தெரியா மல் எடுக்கப்படும் கேளிக்கை வீடியோக் கள்) மூலம் இளைஞர்களின் உயிரில் விளையாடி வருவது முகம் சுளிக்க வைக்கிறது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவரான அனாடோலி  (28) தற்போது துபாயில் வசிக்கி றார். தீவிர உடற்பயிற்சி மூலம் தனது உடலை மிகவும் கம்பீரமாக வைத்துள் ளார். குத்துச்சண்டை போட்டியில் கள மிறங்கும் அளவிற்கு அனாடோலிக்கு உடல் கட்டமைப்பு உள்ளது.  அதாவது அபாயகர மான உடற்பயிற்சி பிரிவான டெத் லிப்ட் (ஜிம் வகை) மூலம் 300 கிலோ தூக்கும் உடல்வாகுவை பெற்றுள்ளவர். இத்தகைய சூழலில் உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஏதாவது ஒரு உடற்பயிற்சி கூடத்திற்கு (ஜிம்), மாறு வேடத்தில் (சுத்தம் செய்பவர்) சென்று அங்கு அதிகப்படி யான (200 கிலோவிற்கு மேல்) எடைகளை தூக்கி பிராங்க் மூலம் அதிர்ச்சி வைத்தி யம் அளிக்கிறார்.  அனாடோலி மாறுவேடத்தில் செல்லும் பொழுது உடலை மறைக்கும் உடைகளை அணிகிறார். அதனால் அவரது ஜிம் கட்டமைப்பு உடல் வெளியில் தெரியாது. கிட்டத்தட்ட ஒல்லியாக சாதா ரண மனிதனாக காட்சி அளிக்கிறார். மேலும் பிராங்க் முடிந்த பின்பு, இதை பிராங்க் என்றும், நான் உடற்பயிற்சி மாஸ்டரைப் போன்றவன் என்றும் அனாடோலி வெளிபடுத்த மறுக்கிறார். ஒல்லியாக இருக்கும் சுத்தம் செய்யும் நபரே இவ்வளவு எடை தூக்கும் பொழுது நாம் ஏன் தூக்க முடியாது? என ஜிம் செல்லும் இளைஞர்கள் தங்களது உடல் வாகுவை மீறி அதிக எடைகளை தூக்க முயல்கின்றனர்.  இது உயிருக்கே உலை வைக்கும் என்பதால் அனாடோலி தனது பிராங்க் நிகழ்வுகளை நிறுத்துவது தான் நல்லது. பெரும்பாலும் அனாடோலி பிராங்க் செய்வது டெத் லிப்டில் மட்டுமே. டெத் லிப்டில் சற்று கவனம் சிதறினால் முதுகு தண்டு துண்டாக சிதறிவிடும். மாரடைப்பு வரக் கூட அதிக வாய்ப்பு உள்ளது. இதனை அறியாமல் தன்னுடைய சுயநலத் திற்காக அனாடோலி இளைஞர்களின் உயிரில் விளையாடுவது மிக மோசமா னது என்பது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பான கட்டத்தில் “பாக்சிங் டே” டெஸ்ட்

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் கள மிறங்கிய நிலையில், மூத்த வீரர் ஸ்மித்தின் (140) அபார சதத்தின் உதவி யால் முதல் இன்னிங்சில் 122.4 ஓவர்க ளில் 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி நிதிஷின் (114)  அசத்தலான சதத்தின் உதவியால் 119.3 ஓவர்களில் 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  105 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி  4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 82 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்து இருந்தது. லயன் (41) - போலந்து (10) ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் முன்னிலையுடன் உள்ள நிலையில், திங்களன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.