games

img

உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா 2023

10-வது உலகக்கோப்பை தொடர் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் கூட்டாக 2011 பிப்ரவரி, மார்ச் மாதம் நடைபெற்றது.  இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், கனடா, அயர்லாந்து, கென்யா, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, வங்கதேசம் என மொத்தம் 14 நாடுகள் கலந்து கொண்ட தொடரில், அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.  கனடா, அயர்லாந்து, கென்யா, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, வங்கதேசம் ஆகிய சிறிய அணிகள் லீக் சுற்றோடு வெளியேறியது. காலிறுதியில் தோனி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி நடப்பு சாம்பியனான  ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. மற்ற காலிறுதி ஆட்டங்களில் மேற்கு இந்தியத் தீவுகளை பாகிஸ்தானும், தென் ஆப்பிரிக்காவை நியூஸிலாந்தும், இங்கிலாந்தை இலங்கையும் வீழ்த்தின.  அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு கம்பீரமாக நுழைந்தது. மறுமுனையில் இலங்கை அணி நியூஸிலாந்து அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.  உலகக்கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் இரு ஆசிய நாடுகள் பலப்பரீட்சை நடத்தியது இதுவே முதல் முறையாக என்ற நிலையில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 274 ரன்கள் குவித்தது. 275 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி தொடக்கத்தில் திணறியது. தோனி, கோலி, கம்பீர், ஆகியோரின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 28 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. மேலும் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றது.