games

img

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் மே.இ.தீவுகள் திரில் வெற்றி

12-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்து நாட்டின் மவுண்ட் மவுங்கானுயி நகரில் உள்ள  பே ஓவல் மைதானத்தில் வெள்ளியன்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் உள்ளூர் அணியான நியூசிலாந்து அணியும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் மோதின.  டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது நியூசிலாந்து அணி. முதலில் களமிறங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி தொடக்க வீராங்கனை மேத்யூஸின் (119) அபார சதத்தின் உதவியால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்தது. 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 49.5 ஓவர்களில் 256 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 3 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி பெற்று உலகக் கோப்பை சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்த அணி என்ற பெருமையைபெற்றது.