இளையோர் ஆசிய கிரிக்கெட் கோப்பை யாருக்கு?
இந்தியா - வங்கதேசம் இன்று பலப்பரீட்சை
11ஆவது சீசன் 19 வயதிற் குட்பட்ட இளையோர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ் தான், இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் உள் ளிட்ட 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் ஆட்டத் தின் முடிவில் பாகிஸ்தான், வங்கதேசம், இந்தியா, இலங்கை ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற் றன. அரையிறுதியில் இந்திய அணி இலங்கையையும், வங்க தேசம் அணி பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டி யில் இந்தியா - வங்கதே சம் அணிகள் கோப்பைக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன. 9ஆவது முறையாக கோப் பையை கைப்பற்றும் முனைப் பில் இந்திய அணியும், 2ஆவது முறையாக கோப் பையை கைப்பற்றும் முனைப்பில் வங்கதேச அணி யும் என இரு அணிகளும் ஆசி யக் கோப்பையை கைப்பற்றும் நோக்கத்துடன் களமிறங்குவ தால் இந்த ஆட்டம் பரபரப் பாக நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.
அடிலெய்டு டெஸ்ட்
டிராவிஸ் ஹெட் அதிரடி சதம் ; இந்தியா தடுமாற்றம்
ஆஸ்திரேலியா வில் நடை பெற்று வரும் 5 போட்டிகளைக் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி 2 வாரத்திற்கு முன்பு பெர்த்தில் நடை பெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரண்டா வது டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை அன்று அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக (பிங்க் பந்து டெஸ்ட்) தொடங்கி யது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கி யது. ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார் க்கின் (6 விக்கெட்டுகள்) மிரட்டலான பந்துவீச்சை சமா ளிக்க முடியாமல் இந்திய அணி முதல் இன்னிங்சில் 44.1 ஓவர்களில் 180 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் 42 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் டெஸ்ட் போட்டியை போல் அல்லாமல் நிதானமாக ரன் குவித்தது. எனினும் நடுக் கட்டத்தில் களமிறங்கிய டிராவிஸ் ஹெட்டின் (140 ரன் கள்) அதிரடி சதத்தின் உதவியால் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 87.3 ஓவர்களில் 337 ரன்களு க்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்ச மாக பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
157 ரன்கள் பின்னிலை யுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி வழக்கம் போல ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் - கம்மின்ஸ் - போல ந்து கூட்டணியிடம் சிக்கிக் கொண்டது. 105 ரன்கள் எடுப்பதற்குள் இந்திய அணி மிடில் ஆர்டரை இழந்த நிலை யில், இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 24 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடு த்து, ஆஸ்திரேலிய அணியை விட 29 ரன்கள் பின்தங்கியுள் ளது. ஞாயிற்றுக்கிழமை தொ டர்ந்து 3ஆவது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.