games

img

ஐபிஎல் : குவாலிபையர் 2 இறுதிக்கு முன்னேறுவது யார்?

கிரிக்கெட் உலகின் முதன்மை யான உள்ளூர் டி-20 தொட ரான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குவாலிபையர் ஆட்டத்தில் வெற்றி பெற்று அறிமுக தொடரிலேயே இறுதி க்கு முன்னேறி வரலாறு படைத்தது குஜராத் அணி. புதனன்று நடைபெற்ற வெளியேறுதல் (எலிமினேட்டர்) சுற்றில் பெங்களூரு அணி லக்னோவை நாக் அவுட் செய்தது.  இந்நிலையில் குஜராத் அணி யுடன் இறுதிப்போட்டியில் மோது வதற்கான அணியை தேர்வு செய்யும் குவாலிபையர் - 2 ஆட்டம் வெள்ளி யன்று நடைபெறுகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் பெங்களூரு - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

யாருக்கு வெற்றி?

வீச்சு என இரண்டிலும் சரிசம பலத்தை பெற்றிருந்தாலும் ஆட்டத்தின் இறுதி வரை கடுமையாக போராடி வெற்றியை  ருசிப்பதில் பெங்களூரு அணி கச்சித மாக செயல்படுவதால் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.  மேலும் விராட் கோலி, டு பிளசிஸ் போன்ற அனுபவ கேப்டன்கள் இருப்ப தும் பெங்களூரு அணிக்கு கூடுதல்  சாதகத்தை ஏற்படுத்தும். முற்றிலும் இளம்வீரர்களை அதிகம் கொண்டுள்ள ராஜஸ்தான் அணி கடுமையாக போராடி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இளம் கன்றுகள் பயம் அறியாது என்ற சொற்றொடருக்கு ஏற்ப அதிரடியாக விளையாடக்கூடிய ராஜஸ்தான் அணியை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. லீக் ஆட்டங்களில் சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட சீனியர் அணிகளை பந்தாடிய அனுபவம் ராஜஸ்தான் அணிக்கு கைகொடுக்கும் என்பதால் அந்த அணிக்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதனால் குவாலிபையர் -2 ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெறும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

பெங்களூரு - ராஜஸ்தான்
இன்று பலப்பரீட்சை

இடம் : அகமதாபாத் மைதானம், குஜராத்
நேரம் : இரவு 7:30 மணி

 

;