games

img

உலகக் கோப்பை கால்பந்து 2022...

டிக்கெட் விற்பனை அமோகம்

22-வது சீசன் உலகக்கோப்பை தொடர் அரபு நாடான கத்தாரில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ள நிலையில், உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான டிக்கெட் விற்பனை மிக குறுகிய காலத்தில் 3 மில்லியனை (30 லட்சம்) நெருங்குகிறது என்று சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் கியானி இன்பான்டினோ தகவல் தெரிவித்துள்ளார். இதுவரை விற்கப்பட்ட 2.89 மில்லியன் (28 லட்சம்)டிக்கெட்டுகளில் போட்டியை நடத்தும் கத்தார், அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய 3 நாடுகளில் உள்ள ரசிகர்கள் அதிகளவில் டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். மேலும் கத்தாரில் குறைந்த தங்குமிட வசதிகள் இருப்பதால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அண்டை நாடுகளில் தங்கி போட்டிகளுக்காக தோஹாவுக்குச் (கத்தார்) செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என பிபா தகவல் தெரிவித்துள்ளது.