games

img

விளையாட்டு...

அடுத்த கிராண்ட்ஸ்லாம்... இன்னும் 19 நாட்கள்

விம்பிள்டன்
2023
தொடங்கும் நாள் : ஜூலை 3  இடம் : லண்டன், இங்கிலாந்து

டென்னிஸ் உலகில் அதிக பரிசுத்தொகை கொண்ட பெருமை உடையது விம்பிள்டன் தொடர் ஆகும். நவீனங்கள் வளர்ந்தாலும் இன்னும் இயற்கை புல்வெளியில் நடைபெறும் ஒரே டென்னிஸ் தொடர் என்ற சிறப்பு பெருமை விம்பிள்டனுக்கு உள்ளது.

டிஎன்பிஎல்
2023
இன்றைய ஆட்டம்
தூத்துக்குடி-சென்னை
நேரம் : இரவு 7:00 அணி
இடம் : எஸ்என்ஆர் 
மைதானம், கோவை
சேனல் : தொலைக்காட்சி : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஒடிடி - வூட் (VOOT)

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் 2023
இந்திய அணியின் தற்காலிக அட்டவணை வெளியானது

கிரிக்கெட் உலகின் முக்கிய தொடரான 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் 13-வது சீசன் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியின் ஆட்டங்களுக்கான தற்காலிக அட்டவணை வெளியாகியுள்ளது.

அட்டவணை
இந்தியா - ஆஸ்திரேலியா, அக்., 8 - சென்னை
இந்தியா - ஆப்கானிஸ்தான், அக்., 11 - தில்லி
இந்தியா - பாகிஸ்தான், அக்., 15 - அகமதாபாத்
இந்தியா - வங்கதேசம், அக்., 19 - புனே
இந்தியா - நியூசிலாந்து, அக்., 22 - தர்மசாலா
இந்தியா - இங்கிலாந்து, அக்., 29 -  லக்னோ 
இந்தியா - குவாலிபையர் அணி, நவ., 2 - மும்பை
இந்தியா - தென் ஆப்பிரிக்கா, நவ., 5 - கொல்கத்தா
இந்தியா- குவாலிபையர் அணி, நவ., 11 - பெங்களூரு

குறிப்பு : இதில் குவாலிபையர் என்பது தகுதி சுற்றில் விளையாடி வரும் அணிகள் ஆகும். மேற்குறிப்பிட்ட அட்டவணை தற்காலிகமானது என்றாலும், இறுதி அட்டவணையில் 75% மாற்றமுடியாத அளவிற்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் கோரிக்கை நிராகரிப்பு?

உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அக்டோபர் 15 அன்று நடைபெறுவதாக ஏற்கெனவே வாய்மொழி தகவல்கள் வெளியாகின. அப்பொழுதே குஜராத் மாநிலத்தில் (அகமதாபாத்) விளையாடினால் எங்களுக்கு பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும் எனவும், வேறு இடத்திற்கு ஆட்டத்தை மாற்ற வேண்டும் என ஐசிசி, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது. பாகிஸ்தானின் கோரிக்கை தொடராக இதுவரை எந்தவித பதில் அளிக்காமல் ஐசிசி மற்றும் போட்டியை நடத்தும் இந்திய கிரிக்கெட் வாரியம் அமைதி காத்து வந்த நிலையில், தற்காலிக அட்டவணையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்திலேயே நடைபெறும் என அறிவிக்கப் 
பட்டுள்ளதால் பாகிஸ்தானின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது என சந்தேகம் உருவாகியுள்ளது.