விளையாட்டு உலகில் முக்கிய தொடர்களில் ஒன்றான கிரிக்கெட் உலகக்கோப்பையின் (50 ஓவர்) 13-ஆவது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 10 நகரங்களில் நவம்பர் 19 வரை நடைபெறும் இந்த தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 16-ஆவது லீக் ஆட்டம் தமிழ்நாடு தலைநகர் சென்னையில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான்
இடம் : எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை, தமிழ்நாடு
நேரம் : மதியம் 2:00 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஓடிடி : ஹாட் ஸ்டார் (இலவசம் - ஸ்மார்ட்போன் மட்டும், ஸ்மார்ட் டிவிக்களில் பார்க்க சந்தா கட்டணம்)
இனி ஆஸ்திரேலியாவின் ஆட்டம் அனல் பறக்கும்
5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி நடப்பு சீசன் உலகக்கோப்பை தொட ரின் முதல் 2 ஆட்டங்களில் (இந்தியா, தென் ஆப்பிரிக்கா) தோல்வியை தழு வியது மட்டுமல்லாமல் புள்ளிப்பட்டி யலில் கடைசி இடத்திற்குச் சென்றது. இதனால் ஆஸ்திரேலிய அணியை கிண்டல் அடித்தும், கடுமையாக விமர்சித்தும் கிரிக்கெட் ரசிகர்கள் பொழுதை கழித்தனர். இந்நிலையில், திங்களன்று நடைபெற்ற 3-ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 5 விக்., வித்தியாசத்தில் அதிரடியாக வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் மேல் நோக்கி முன்னேறியுள்ளது. அனல்பறக்கும் பொதுவாக ஆஸ்திரேலிய அணி வீரர் - வீராங்கனைகள் கிரிக்கெட் விளை யாட்டு மட்டுமின்றி அனைத்து விளை யாட்டுகளிலும் வித்தியாசமான திறனை வெளிப்படுத்துவார்கள்.
உதாரணமாக கால்பந்து விளையாட்டில் ஆஸ்தி ரேலிய அணியை எடுத்துக் கொண்டால் முதல் பாதியில் அந்த அணி வீரர்கள் சொதப்பினால் 2-ஆம் பாதியில் முரட்டுத்தனமாக விளையாடி ஆட்டத் தின் போக்கை மாற்றுவார்கள். அதே போலதான் கிரிக்கெட் விளையாட்டி லும். 5 போட்டிகளை கொண்ட ஒரு தொடரில் ஆஸ்திரேலிய அணி முதல் 2 போட்டிகளில் தோல்விகண்டால், மற்ற அணிகளை போல தொடர் முழுவதும் தோல்வியை தழுவாது. 3-ஆவது ஆட்டத்தில் திடீரென ஆதிக்கம் செலுத்தி ருத்ரதாண்டவம் ஆடும். இதே முறையில்தான் நடப்பு சீசன் உலகக்கோப்பையில் இலங்கை அணியை புரட்டியெடுத்துள்ளது ஆஸ்திரேலிய அணி. கடந்த கால வரலாறு தெரியாமல் தற்போதைய உலகக்கோப்பை சீசனில் ஆஸ்தி ரேலியாவின் வெறும் 2 ஆட்டத்தின் தோல்வியை வைத்து ரசிகர்கள் அந்த அணியை கிண்டல் செய்து வருகின்ற னர். ஆஸ்திரேலிய அணி நடப்பு சீசன் உலகக்கோப்பையில் தனது முதல் 2 ஆட்டங்களில் (இந்தியா, தென் ஆப்பி ரிக்கா) பலமான அணியை எதிர் கொண்டு தோல்வியை தழுவியது என்ப தை நினைவில் கொள்ள வேண்டும். மற்ற அணிகள் சிறிய அணிகளுடன் வெற்றி பெற்று புள்ளிகளை பெற்று வருகிறது. 2 படுதோல்வியுடன் ஆஸ்தி ரேலியா மீண்டும் அதிரடி பார்மை பெற்றுள்ளதால் இனி ஒவ்வொரு ஆட்ட த்திலும் அனல் பறக்கும் சம்பவத்தோடு ஆஸ்திரேலியா கண்டிப்பாக நடப்பு சீசன் உலகக்கோப்பையில் அரையி றுதிக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது.
ஆஸி., அடுத்து விளையாடவுள்ள ஆட்டங்கள்
பாகிஸ்தான் - அக்.20 (பெங்களூரு)
நெதர்லாந்து - அக்.,25(தில்லி)
நியூஸிலாந்து - அக்.,28 (தர்மசாலா)
இங்கிலாந்து - நவ.,4 (அகமதாபாத்)
ஆப்கானிஸ்தான் - நவ., 7 (மும்பை)
வங்கதேசம் - நவ., 11 (புனே)
மறைக்கப்பட்ட தாஜ்மகால்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உலகக் கோப்பைக்கான பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டது. ஆனால் தாஜ்மகாலில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை மட்டும் பிரபலப்படுத்தாமல் வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.