ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8-வது சீசன் உலகக்கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் கோப்பை வெல்லும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டு வெளியேறியது. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி ஞாயிறன்று நடைபெறும் கோப்பைக்கான பலப்பரீட்சையில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய சந்திக்கும் மோசமான தோல்விகளில் இதுவும் ஒன்றாகும். (ஸ்கோர்: இந்தியா 168/6 (20), இங்கிலாந்து 170/0 (16))
2 நாட்கள் விடுமுறை
வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாட்கள் உலகக்கோப்பை தொடருக்கு விடுமுறை நாளாகும். விடுமுறை நாளான ஞாயிறன்று மெல்போர்ன் நகரில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
இறுதிப்போட்டி
பாகிஸ்தான்-
இங்கிலாந்து
நாள் : நவம்பர் 13-ஆம்
தேதி (ஞாயிறு)
இடம் : மெல்போர்ன்