games

img

உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் நைட்ரைடர்ஸ் குழுமம் யுஏஇ டி20 லீக்-கில் புதிய அணியை வாங்கியது

பாலிவுட் பிரபலங்கள் ஷாருக்கானும் ஜுஹி சாவ்லாவும் இணைந்து 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை விலைக்கு வாங்கினார்கள். அன்று முதல் இன்று வரை அந்த அணி ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணியாக வலம் வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிதாக தொடங்கப்படவுள்ள யுஏஇ டி20 லீக் தொடரில் புதிய அணியை வாங்கியுள்ளது நைட்ரைடர்ஸ் குழுமம். பங்கேற்கும் 6 அணிகளில் அபுதாபி நகரத்தின் பெயரில் ஒரு அணியை வாங்கியுள்ளது. அந்த அணிக்கு அபுதாபி நைட்ரைடர்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.  இது நைட்ரைடர்ஸ் குழுமத்தின் 4-வது டி20 லீக் அணியாகும். ஏற்கனவே  கரீபியன் லீக்(சிபிஎல்), யுஎஸ் டி-20 லீக் ஆகிய தொடர்களிலும் நைட்ரைடர்ஸ் குழுமம் அணிகளை கைவசம் வைத்துள்ளது. இந்தியாவின் அதானி, காப்ரி குளோபல், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களும் ஓர் அணியைப் பெற்றுள்ளன.

2027-ஆம் ஆண்டின் தென்கிழக்கு ஆசிய விளையாட்டு போட்டி நடத்தும் உரிமையை பெற்றது மலேசியா

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடை பெறும் தென்கிழக்கு ஆசிய விளை யாட்டுப் போட்டித் தொடரின் 2027-ஆம் ஆண்டின் சீசன் நடத்தும் வாய்ப்பை மலேசி யாவும், 2029-ஆம் ஆண்டுக்கான வாய்ப்பை சிங்கப்பூரும் பெற்றுள்ளன. கொரோனா பரவல் காரணமாக 2021-ஆம் ஆண்டு சீசன் (31-வது சீசன்) வியட்நாம் தலைநகர் ஹனோயில் ஆறுமாத கால தாமதத்திற்கு பிறகு வியாழனன்று துவங்கியது.  2023-ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கம்போடியா விலும், 2025-ஆம் ஆண்டுக்கான தொடர் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் நடைபெறுகிறது.

ஐபிஎல்
இன்றைய ஆட்டம்

பெங்களூரு - பஞ்சாப்
இடம் : பிராபோர்ன், மும்பை
நேரம் : இரவு 7:30 மணி