இந்திய அணியின் நியூசிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கான அட்டவணை இன்று வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு பிறகு நவம்பரில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளுக்காக இந்தியா நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும் என நியூசிலாந்து கிரிக்கெட் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இந்திய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து, நவம்பர் 18 ஆம் தேதி டி20 போட்டிகளுடன் தொடங்க உள்ளது. அதே நேரத்தில் ஒருநாள் போட்டிகள் நவம்பர் 25 முதல் நவம்பர் 30 வரை நடைபெறும்.
வெலிங்டன், டவுரங்கா மற்றும் நேப்பியர் ஆகிய இடங்களில் 3 டி20 போட்டிகளிலும், ஆக்லாந்து, ஹாமில்டன் மற்றும் கிறிஸ்ட்சர்ச்சில் 3 ஒருநாள் போட்டிகளும் நடைபெறவுள்ளன.
இந்திய அணியின் நியூசிலாந்துச் சுற்றுப்பயணம் 2022 அட்டவணை:
நவம்பர் 30 ஆம் தேதி வெலிங்டனில் முதல் டி20, நவம்பர் 20 ஆம் தேதி மவுண்ட் மவுங்கானுவில் 2வது டி20, நவம்பர் 22 ஆம் தேதி நேப்பியரில் 3வது டி20 போட்டி நடைபெறுகிறது.
நவம்பர் 25 ஆம் தேதி ஆக்லாந்தில் முதல் ஒருநாள் போட்டியும், நவம்பர் 27 ஆம் தேதி 2வது ஒருநாள் போட்டியும், நவம்பர் 27 ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் 3வது ஒருநாள் போட்டியும் நடைபெறவுள்ளது.