games

img

டி20 உலகக் கோப்பை : இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை 

டி20 உலகக் கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

 டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் கடந்த 17 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று இரவு 7.30 மணிக்குத் துபாயில் நடைபெறவுள்ள ஆட்டத்தில்,  இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதுவரை இரு அணிகளும் தலா ஒரு போட்டியை மட்டுமே சந்தித்துள்ள நிலையில், பாகிஸ்தானுடனான அந்தப் போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் தோல்வி அடைந்துள்ளது. 

இதற்கு முன் நடந்த ஐசிசி டி20 உலகக்கோப்பையில் இரு அணிகளும் 2 முறை மோதியுள்ள நிலையில், 2 போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்கும் முக்கியமானது என்பதால், இருதரப்பு வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தானுடனான போட்டியில் தோள்பட்டையில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா தற்போது நலமுடன் இருப்பதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

;