லக்னோ
ஆதரவு மழையில் நனையும் கே.எல்.ராகுல்
லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்ஜீவ்
கோயங்காவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வீரரும், அதிரடி பேட்டரும், சிறந்த விக்கெட் கீப்பரு மான கே.எல்.ராகுல் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக கேப் டன் பொறுப்புடன் விளையாடி வரு கிறார். கடந்த புதனன்று நடைபெற்ற 57ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதரா பாத் அணியிடம் லக்னோ அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி யை சந்தித்தது. லக்னோ அணியின் தோல்வி சர்வதேச அளவில் பிரபல மாகியதால் அதிருப்தி அடைந்த அந்த அணியின் உரிமையாளர் சஞ்ஜீவ் கோயங்கா மைதான பெவிலியன் நுழைவாயிலில் கேப்டன் கே.எல்.ராகுலை சரமாரியாக திட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், “இந்திய கிரிக்கெட் அணி யின் முக்கிய அடையாளமாக உள்ள கே.எல்.ராகுலை திட்டுவதற்கு சஞ்ஜீவ் கோயங்காவுக்கு என்ன தகுதி இருக்கிறது? இது அவரது தொழில் மேடை இல்லை” என ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் சஞ்ஜீவ் கோயங்காவை வறுத்தெடுத்து வரு கின்றனர். மேலும், “கே.எல்.ராகுல் அவர்களே! வேறு அணிக்கு செல்லுங்கள்” என அறிவுரை கூறி, அவருக்கு ஆதரவு குரல் பிரம்மாண்ட அளவில் ஒலித்து வருகிறது. தேர்தல் பிரச்சார வீடியோக்களை விட கே.எல். ராகுலின் ஆதரவு அலை சமூக வலைத் தளங்களில் டாப் ஆர்டரில் வைரலாகி வருகிறது.
பாஜகவும் சிக்கிய பரிதாபம்
இந்திய தொழிலதிபர்களில் மிக முக்கியமானவர் சஞ்ஜீவ் கோயங்கா (ஆர்பிஎஸ்ஜி குழும தலைவர்) ஆவார். பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜகவிற்கு மிகவும் நெருக்கமான இந்த சஞ்ஜீவ் கோயங்கா இதற்கு முன் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் (தோனி விளையாடிய அணி) அணியை வாங்கி இருந்த நிலையில், அந்த அணியை கலைத்து விட்டு, 2022இல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வாங்கினார். இந்த அணி 2 சீசனில் கோப்பையை வெல்லாவிட்டாலும், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அளவிற்கு ஓரளவு திடமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நடப்பு சீசனிலும் வழக்கம் போல கே.எல்.ராகுலின் தலைமையில் திடமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6ஆவது இடத்தில் உள்ளது. ஆனால் ஹைதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் கிடைத்த படுதோல்வியால் கே.எல்.ராகுலை, சஞ்சீவ் கோயங்கா பொது இடத்தில் வைத்து திட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாஜகவினர் மற்றும் பாஜக உடன் தொடர்பில் இருப்பவர்கள் எப்பொழுதும் நல்ல மனதோடு இருப்பது கிடையாது, அதனால் தான் பாஜகவுடன் மிக நெருக்கமாக உள்ள சஞ்ஜீவ் கோயங்கா இவ்வாறு நடந்து கொள்கிறார் என ரசிகர்கள் பாஜகவையும் சேர்த்து வறுத்தெடுத்து வருகின்றனர்.
எந்த நேரத்திலும் கேப்டன் பதவியை கே.எல்.ராகுல் ராஜினாமா செய்யலாம்
கோயங்காவின் மோசமான நடத்தை விதியால் லக்னோ அணியின் கேப்டன் பொறுப்பை கே.எல்.ராகுல் எந்த நேரத்திலும் ராஜினாமா செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கோயங்கா கே.எல்.ராகுலிடம் சமாதானம் பேச முயன்றதாகவும், கோயங்காவுட னான சந்திப்பை கே.எல்.ராகுல் புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் லக்னோ அணியில் குழப்பம் உருவாகியுள்ளது.
அடுத்த கேப்டன் யார்?
ஒருவேளை கே.எல்.ராகுல் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தால் லக்னோ அணியின் அடுத்த கேப்டன் யார்? என்ற விவாதம் தீவிரமடைந்துள்ள நிலையில், குயிண்டன் டி காக், நிக்கோலஸ் பூரன், ஸ்டோய்னிஸ், க்ருனால் பாண்டியா என 5 பேர் லக்னோ அணியை வழிநடத்தும் தகுதியுடன் உள்ள னர். இவர்களில் யாராவது ஒருவரை கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளது.
ஐபிஎல் 2024 இன்றைய ஆட்டம்
மும்பை - கொல்கத்தா
(60ஆவது ஆட்டம்)
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா, மேற்கு வங்கம்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்,
ஜியோ சினிமா (ஒடிடி - இலவசம்)