games

img

இந்திய நட்சத்திரங்கள் அடுத்தடுத்து வெளியேற்றம்

பேட்மிண்டன் உலகின் முக்கிய தொடரான மலேசிய ஓபன் தொடரின் 66-வது சீசன் செவ்வா யன்று தொடங்கியது. மொத்தம் ரூ.10 கோடி பரிசுத்தொகை  கொண்ட இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பானின் ரிஷி மோட்டோவிடம் 21-19, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்ந்து வெளியேறினார். 

சாய்னா போராடி தோல்வி

மகளிர் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால், சீனாவின் ஹானிடம் 12-21, 21-17, 12-21 என்ற செட் கணக்கில் போராடி வீழ்ந்து தொடரிலிருந்து வெளியேறினார். மற்றொரு இந்திய வீராங்கனை ஆக்கர்ஷி, தைவானின் வென்  சியிடம் 10-21, 8-21 என்ற செட் கணக்கில் படுதோல்வியைச் சந்தித்தார். ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் பஞ்சலா - கரகா ஜோடி தென்கொரிய ஜோடியிடம் வீழ்ந்தது. 

 ஒரே ஒரு ஜோடி.. அடுத்த சுற்றுக்குள்... 

மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் காயத்ரி - ஜாலி ஜோடி தைவானின் யுங் ஜோடியை 21-19, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது. மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் தொடக்க சுற்றில் இந்த ஜோடி மட்டுமே இந்தியா சார்பில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

5 மாத  இடைவெளிக்கு பின் சிந்து

இந்தியாவின் நட்சத்திர நாயகி சிந்து கணுக்கால் காயம் காரணமாக 5 மாத காலம் விளையாடாமல் இருந்த நிலை யில், மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் களம் காணவுள்ளார். சிந்து தனது தொடக்க சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மரினை (ஸ்பெயின்) எதிர்கொள்கிறார். இந்த ஆட்டம் புதனன்று காலை நடைபெறுகிறது.