தென் ஆப்பிரிக்கா-நியூஸிலாந்து இன்று மோதல்
இந்தியாவில் நடைபெற்று வரும் 13-ஆவது சீசன் உல கக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடுக்கட்டத்தை தாண்டி யுள்ள நிலையில், புதனன்று நடை பெறும் 32-ஆவது லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து - தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. இதுவரை விளையாடிய 6 ஆட்டங் களில் 5 வெற்றி, ஒரு தோல்வி என 10 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா புள்ளிப்பட்டியலில் 2-ஆவது இடத்தில் உள்ளது. நியூஸிலாந்து அணி 6 லீக் ஆட்டங்களில் விளை யாடி 4 வெற்றி, 2 தோல்வி என புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டியலில் தென் ஆப்பிரிக்காவை பின்னுக்குத் தள்ளி 2-ஆவது இடத்திற்கு முன் னேறும் முனைப்பில் நியூஸி லாந்து அணியும் (ரன் ரேட் அடிப்படையில் மட்டுமே வாய்ப்பு), இந்திய அணியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தி ற்கு முன்னேறும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா (ரன்ரேட் அடிப்படையில் மட்டுமே வாய்ப்பு) அணியும் என இரு அணிகளும் வெற்றி யின் மீது மட்டுமே குறியாக கள மிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து
இடம் : புனே மைதானம், மகாராஷ்டிரா
நேரம் : மதியம் 2:00 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஓடிடி - ஹாட்ஸ்டார்
(இலவசம் - ஸ்மார்ட்போன் மட்டும்.
ஸ்மார்ட் டிவிக்களில் பார்க்க சந்தா கட்டணம்)
பாதிப்பு ஏற்படுமா?
மராத்தா இடஒதுக்கீடு கோரி ஆர்வலர் மனோஜ் ஜாரங்கே கடந்த 25-ஆம் தேதி முதல் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னாவில் உள்ள அந்தர்வாலி சாரதி கிராமத்தில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். இந்த போராட்டத் திற்கு மாநிலம் முழுவதும் ஆதரவு குவிந்து வரும் நிலையில், திங்களன்று மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ-வான பிரகாஷ் சோலங்கியின் வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனால் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழல் காணப்பட்டு வரும் நிலையில், மராத்தா போராட்ட வன்முறையால் புதன் (புனே) மற்றும் வியாழனன்று (மும்பை) நடைபெறும் உலகக்கோப்பை போட்டிகளுக்கு எதாவது வன்முறை தொடர்பான சிக்கல் வருமா என பதற்றம் கிளம்பியுள்ளது.
வெற்றி ரகசியம்
நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆப்கானிஸ்தான் அணி தான் விளை யாடிய 6 ஆட்டங்களில் 3 வெற்றி, 3 தோல்வி என 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5-ஆவது இடத்தில் உள்ளது. இந்தியா, வங்க தேசம், நியூஸிலாந்து அணிகளிடம் போராடி வீழ்ந்த ஆப்கானிஸ்தான் அணி, மற்ற ஆட்டங்களில் பல மான இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணியை புரட்டி யெடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி யின் இந்த திடீர் உத்வேகத்திற்கு காரணம் உலக நாடுகளில் நடை பெறும் அனைத்து டி-20 லீக் தொடர்களிலும் அந்த அணி வீரர்கள் தவறாமல் கலந்துகொள்வதுதான் காரணம் ஆகும். அங்கு கிடைக்கும் அனுபவத்தின் மூலம் நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில் ஆப்கா னிஸ்தான் அசத்தி வருகிறது.
மெண்டிஸ் - படுதோல்வி
காயம் மற்றும் தொடர் தோல்விகளால் இலங்கை அணி இளம் வீரர் பதி ரனாவை நீக்கி, அவருக்கு பதி லாக அனுபவ வீரரும், முன்னாள் கேப்டனுமான ஏஞ்சலோ மெண்டி ஸை (36) களமிறக்கியது. மெண்டிஸ் வருகை உற்சாகத் தால் தனது 5-ஆவது லீக் ஆட்டத் தில் நடப்பு சாம்பியன் இங்கி லாந்து அணியை புரட்டி யெடுத்தது இலங்கை. இதனால் 6-ஆவது லீக் ஆட்டத்திலும் இளம் அணியான ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முன்னேறும் கன வோடு களமிறங்கிய இலங்கை அணியை ஆப்கானிஸ்தான் புரட்டியடித்தது. மெண்டிஸ் வந்தும் என்ன பயன். இளம் அணியிடம் அடி வாங்கியதுதான் மிச்சம்.