இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.
இந்தியா, இலங்கை இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. லக்னோவில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் 1-0 என்ற கணக்கில் இலங்கையை தோற்று இந்தியா வென்றது. இரண்டாவது டி20 போட்டி இமாச்சல பிரதேசம் மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் இன்று நடைபெறுகிறது.
இந்த நிலையில் டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக இந்தியாவின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்கனவே இடம்பிடித்துள்ள மயங்க அகர்வால், தர்மசாலாவில் நடைபெறும் டி20 ஆட்டத்திலும் இடம் பெறுகிறார்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன்இஷான், கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சஹால், ரவி பிஷ்னாய், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஜாஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஆவேஷ் கான், மயங்க் அகர்வால்.